குடிநீருக்கு சிரமப்பட்ட பொதுமக்கள்: மண்வெட்டியுடன் களத்தில் இறங்கிய பா.ஜ.க கவுன்சிலர்!

குடிநீருக்காக சிரமப்பட்ட வார்டு மக்கள் களத்தில் இறங்கி வேலை பார்த்த பா.ஜ.க கவுன்சிலர்.

Update: 2022-04-17 14:01 GMT

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்க குழி தோண்டும் பணிகள் பல இடங்களில் நடந்து வருகிறது. மார்த்தாண்டம் 16வது வார்டு பகுதியில் குழிதோண்டும் போது வீடுகள் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டது. எனவே பணிகள் பாதியில் தடைபட்டது. தொடர் விடுமுறை என்பதால விடுமுறை என்பதால் அதிக அளவில் தண்ணீர் தேவைப்பட்டோருக்கு தண்ணீரே கிடைக்காததால் அவதி அடைந்தனர். தொடர்ந்து வார்டு பா.ஜ.க கவுன்சிலரான ரெத்தினமணி ஒப்பந்தகாரர் மற்றும், குடிநீர் வாரியத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக் கை எடுக்காததால் தானே பிளம்மர் உதவியுடன் மண் வெட்டியுடன் களத்தில் இறங்கி பழுதடைந்த உடைப்பை சரி செய்தார். 


வார்டு பா ஜ.க கவுன்சிலரான ரெத்தினமணி ஒப்பந்தகாரர் மற்றும், குடிநீர் வாரியத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தானே களத்தில் இறங்கி அதனை சரிப்படுத்தும் பணியில் தொடர்ந்தார். பழுதடைந்த உடைப்பை சரி செய்த பின்னர் ஒப்பந்தகாரர்கள் ஏற்படுத்திய சேதத்தை சரி செய்து குழிகளை மூடியுள்ளார். மேலும் வார்டு கவுன்சிலரின் இந்த செயலை மக்களும் பாராட்டி உளளார்கள். குழித்துறை நகராட்சியில் மார்தாண்டம் பகுதியில் 16வது வார்டு மக்கள் குடிநீருக்கு சிரமபட்டதால் கவுன்சிலர் மண்வெட்டியுடன் தானே முன்வந்து களத்தில் இறங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


பின்னர் இதை அந்த பகுதி மக்கள் பாராட்டியதோடு அதை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். கவுன்சிலரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அதிகாரத்தில் இருக்கும் நபர்கள் தங்கள் தொகுதியில் உள்ள மக்களின் கஷ்டங்களை தீர்க்க தானே களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்று மக்களின் எண்ணமாக உள்ளது. 

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News