பா.ஜ.கவின் பெண் தலைவர்களை அவதூறாக பேசிய தி.மு.க - பா.ஜ.க மகளிர் அணி போலீசில் அதிரடி புகார்!

பா.ஜ.கவை சேர்ந்த 4 பெண் தலைவர்களை பற்றி பொதுக்கூட்டத்தின் போது அவதூறாக பேசிய திமுக மூத்த தலைவர் மீது புகார் ஒன்றைக் கொடுத்த பா.ஜ.க மகளிர் அணி.

Update: 2022-10-30 07:23 GMT

தி.மு.க மூத்த தலைவரின் அவதூறான வார்த்தைகள்:

பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நோக்கம் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்பது தான் அது அரசியலாக இருந்தாலும் சரி, கட்சிப் பணிவாக இருந்தாலும் சரி பெண்களுக்கு சம அங்கீகாரம் கொடுத்து அவர்களுக்கு சேர வேண்டிய உரிமைகளை கொடுத்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பெண்கள் பா.ஜ.கவில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள். குறிப்பாக சினிமா துறையில் இருந்த பெண்களும் பாஜகவில் முக்கிய பொறுப்பில் வகித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட பொறுப்பில் இருக்கும் பெண்களை தி.மு.க மூத்த தலைவர் ஒருவர் பொதுக்கூட்டத்தின் போது அவதூராகவும் மிகவும் கீழ்த்தரமாகவும் பேசி இருக்கிறார்.


சாட்டையை சுழற்றி பாஜக மகளிர் அணி:

பா.ஜ.கவை சேர்ந்த 4 பெண் தலைவர்களுக்கு எதிராக அசிங்கமான அவதூறான மற்றும் அவர்களை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக கட்சி தலைவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று பா.ஜ.க மகளிர் அணி சார்பில் தற்பொழுது அவர் மீது புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க அணியில் உள்ள பெண்களுக்கு எவ்வளவு மரியாதை அளிக்கப்படுகிறது? என்பது தமிழக மக்கள் அறிந்திருக்கிறார்கள். அதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மேடையில் பேசுவதற்கு ஒரு நெறிமுறை உண்டு. அவற்றை மீறி பெண்களை இப்படி அவதூறாக பேசிய தி.மு.க மூத்த தலைவர் மீது பா.ஜ.க மகளிர் அணியினர் சாட்டையை சுழற்றி இருக்கிறார்கள்.



தி.மு.க பேச்சாளர் சைதை சாதிக் மீது புகார்:

ஆர்.கே.நகர் மேற்கு பகுதி வடக்கு மாவட்டம் பொதுக்கூட்டத்தில் பேசிய திராவிட முன்னேற்ற கழக பேச்சாளர் சைதை சாதிக் (சென்னை தெற்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர்) என்பவர், பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த பெண் அரசியல் தலைவிகளை பற்றி மிகவும் கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும், அரசியல் நாகரிகத்திற்கு அப்பாற்பட்டு பேசிய ஆபாச பேச்சாளரின் பதிவு காரணமாக அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பா.ஜ.க மகளிர் அணியின் சார்பில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

Input & Image courtesy: Twitter Post

Tags:    

Similar News