7 கோடி மதிப்புள்ள ஓவியம்: காவலாளி செய்த சிறிய தவறால் ஏற்பட்ட விபரீதம்!

சுமார் 7 கோடி மதிப்பிலான ஓவியத்தில் காவலாளி செய்த சிறிய தவறு அவருடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது.

Update: 2022-02-14 14:40 GMT

ஓவியங்களை சேகரித்து வைத்திருக்கும் ஒரு நிறுவனத்தில் வேலைபார்க்கும் காவலாளி ஒருவர் தான் செய்த தவறின் மூலமாக 7 கோடி மதிப்பிலான ஓவியத்தில் கிறுக்கல் செய்துள்ளார். வேலைக்கு சேர்ந்த முதல் நாளே இத்தகைய வேலையை செய்து பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொண்டாராம் அந்த காவலாளி. இந்த ஓவியத்தின் தற்போதைய மதிப்பு அமெரிக்க டாலர்கள்படி, ஒரு மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7.24 கோடி. குறிப்பிட்ட ஓவியமானது, அன்னா லெபோர்ஸ்கயாவால் 1932 - 1934 களில் வரையப்பட்ட த்ரீ ஃபிகர்ஸ் (Three Figures) என்று அழைக்கப்படும் ஒரு ஓவியம் ஆகும். இது மேற்கு-மத்திய ரஷ்யாவின் ஸ்வெர்ட்லோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள யெல்ட்சின் சென்டரில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.


மூன்று முகம் என்று அழைக்கப்படும் அந்த ஓவியத்தின் மூன்று புகைப்படங்களும் முகம் தெரியாத அளவிற்கு இருக்கும். அதில் இவர் தன்னுடைய பால்பாயிண்ட் பேனாவை கொண்டு புகைப்படங்களுக்கு கண்களை வரைந்துள்ளார். இதற்காக இவருக்கு கலைப் பொருள்களை அழித்தல் என்பதன் கீழான காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் இந்திய மதிப்பின்படி, சுமார் ரூ.39,900 அபராதம் மற்றும் தொழிலாளர்களுக்கான ஒரு வருட சீர்திருத்த தண்டனையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த ஓவியத்தில் உள்ள தவற்றை சரிசெய்வதற்கு இந்திய மதிப்பின்படி 2 லட்சத்து ஐம்பதாயிரம் வரை செலவாகும். ஆனால் இந்த நிறுவனம் ஏற்கனவே ஓவியத்திற்கு காப்பீடு செய்து இருந்ததால் காப்பீட்டு நிறுவனம் பாதி தொகையை தரும் என்பது ஆறுதலான விஷயம். மேலும் ஓவியத்தை சேதம் ஆகாமல் அதில் உள்ள தவறுகளை திருத்துவதற்கு முடியும் என்று நிபுணர்கள் கூறுவதாக அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News