உயிரிழந்த தாயின் நினைவாக ஆக்சிஜன் ஆட்டோ: 800 உயிர்களைக் காப்பாற்றிய சாதனைப்பெண் !

கொரோனா இரண்டாம் அலையில், தாயை இழந்ததன் காரணமாக ஆக்சிஜன் ஆட்டோ மூலம் 800 உயிர்களைக் காப்பாற்றி சென்னையை சேர்ந்த பெண்.

Update: 2021-08-30 13:14 GMT

கொரோனா இரண்டாம் அலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும்பாலாக இருந்தது. அது எதிர்கொண்ட சென்னையைச் சேர்ந்த 36 வயதான சீதாதேவியும் ஒருவராவார். இவரது 65 வயதான தாயை கடந்த மே மாதம் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏனெனில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. போதுமான மருத்துவ ஆக்சிஜன் கிடைக்காததால் தனது அன்புதாயை இழந்து தவித்த சீதா தேவி, தன்னை போன்ற துயரமான நிலை இனி யாருக்கும் வர கூடாது என்ற முடிவெடுத்து இதுவரை சுமார் 800-க்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்.


தாயை இழந்த சில நாட்களிலேயே மீண்டும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்று மீண்டும் காத்திருந்தார் சீதாதேவி. பெருந்தொற்றுக்கு தான் தாயை இழந்த நிலை போல பிறருக்கு ஏற்பட கூடாது என்பதற்காக "ஆக்சிஜன் ஆட்டோ" உருவாக்கி கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்துள்ளார் சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த சீதாதேவி. ஓட்டுநர் இருக்கையில் இருந்த சீதாதேவி, ஆட்டோவினுள் ஆக்ஸிஜன் சிலிண்டர், ஃப்ளோமீட்டர் மற்றும் மாஸ்க்குகளுடன் கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்ய காத்திருந்தார். இவர் குறிப்பாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கொரோனா இலவச சேவைகளை வழங்கினார்.


சென்னையில் உள்ள சுமார் 10 மருத்துவமனைகளில் சானிட்டரி நாப்கின் டிஸ்பென்சர்களையும் இவர் நிறுவியுள்ளார். இதனிடையே மே மாதத்தில் தனது உன்னதமான ஆக்ஸிஜன் ஆட்டோ சேவையை துவக்கிய சீதாதேவி, தற்போது அதே வசதிகளுடன் மேலும் இரண்டு ஆட்டோக்களை தனது சேவை பணியில் இணைத்துள்ளார். தனது தாயை இழந்த பின்னர் சுமார் 800-க்கும் மேற்பட்டோரின் உயிரை காப்பாற்றி உள்ள சீதாதேவியின் சமூக சேவை உணர்வும் தற்பொழுது சமூக வலைதளங்களில் மக்களின் மனதினை தொட்டு விட்டதாக இருக்கின்றது. 

Input:https://www.news18.com/news/buzz/chennai-woman-saved-800-lives-with-oxygen-auto-after-losing-her-mother-to-covid-19-4134326.html

Image courtesy:News18 


Tags:    

Similar News