ஆப்கன்: விமான பயணத்தின் போது நடுவானில் கர்ப்பிணிப் பெண் குழந்தை பெற்ற சம்பவம் !

அமெரிக்க விமானத்தில் நடுவானில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2021-08-23 13:29 GMT
ஆப்கன்: விமான பயணத்தின் போது நடுவானில் கர்ப்பிணிப் பெண் குழந்தை பெற்ற சம்பவம் !

ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்கு வந்த நிலையில் அந்நாட்டு பொதுமக்கள் பலர் வெளிநாடுகளுக்கும் தப்பித்து வருகின்றனர். பல்வேறு மக்களும் தங்களுடைய நாட்டிலிருந்து வெளியிடும் முயற்சிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக காபூல் விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. மேலும் அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் இரவும் பகலுமாக ஆப்கான் மக்களை காபூலில் இருந்து விமானம் மூலம் வெளியேற்றி வருகின்றனர். 



காபூல் விமான நிலையத்திற்கு செல்பவர்களை நாங்கள் தடுக்கும் வகையில் செயல்பட மாட்டோம் என்று தாலிபான்கள் அறிவித்ததை தொடர்ந்து விமான நிலையத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க C-17 ரக ராணுவ விமானத்தில், ஆப்கானில் இருந்து வெளியேறிய ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு நடுவானில் பிரசவவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அவருக்கு நடுவானில் பிரசவம் பார்க்கப்பட்டது. இதற்கு குறிப்பாக அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் மிகவும் உதவியாக இருந்துள்ளார். 


அந்த விமானம் அமெரிக்கா சென்று அடைந்தவுடன் தாயும், குழந்தையும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இருவரும் நலம் என்ற தகவல் வெளிவந்துள்ளது. சமீபத்தில் காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் கைக்குழந்தைக்கு உதவிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டதை தொடர்ந்து, விமானத்தில் நடைபெற்ற பிரசவம் சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகின்றது. 

Input:https://news.yahoo.com/afghan-woman-delivers-baby-aboard-141000426.html

Image courtesy:yahoo news


Tags:    

Similar News