தலிபான்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் பெண்கள்: ஆப்கானின் முதல் போராட்டம் !

ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் கைப்பற்றினர். அதற்கு எதிராக பெண்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

Update: 2021-08-18 13:32 GMT

தற்பொழுது ஆப்கானிஸ்தானை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தலிபான்களுக்கு எதிராக, அங்கு முதல் போராட்டத்தை பெண்கள் முன்னெடுத்து தற்பொழுது குரல் கொடுப்பது உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். அதிபராக இருந்த அஷ்ரப் கானி பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.  


எனவே தலிபான்களை பார்த்து ஆண்களே பயந்து வேறு நாட்டிற்கு ஓடும் ஒரு சூழலில், பெண்கள் தற்பொழுது இந்த போராட்டத்தை முன்னெடுத்து இருப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் மக்களை ஒரு நிமிடம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதேசமயம் ஆப்கானிஸ்தான் நாட்டின் புதிய அதிபராக தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பராதர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதால் அங்கிருந்து வெளியேற பலரும் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.




இதனிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதாவது, படிப்பு, அரசியல், வேலைகள் என எந்த உரிமைகளையும் பெண்களிடம் இருந்து பறிக்கக் கூடாது என வலியுறுத்தி தலைநகர் காபூலில் பெண்கள் பர்தா அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கர ஆயுதங்களை கையில் ஏந்திய தலிபான்கள் அவர்களை விட்டுப் போகுமாறு வலியுறுத்தினர் இருந்தாலும் பெண்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Input:https://twitter.com/leahmcelrath/status/1427643075829059599?ref_src=twsrc%5Etfw

Image courtesy:wikipedi 

 


Tags:    

Similar News