யானை அடிபடுவதில் இருந்து காப்பாற்றிய ஓட்டுனர்: IFS அதிகாரி வெளியிட்ட வீடியோ !
தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானையை அடிபடுவதில் இருந்து காப்பாற்றிய ஓட்டுனர், வீடியோவை வெளியிட்ட IFS அதிகாரி.;

குறிப்பாக சமீபகாலமாக யானைகளின் மரணம் மிகவும் அதிகரித்து வருகிறது. அதில் ரயில்களில் மோதி மரணம் அடையும் யானைகளின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது. அதிலும் காடுகளுக்குள் செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள தண்டவாளங்கள் மற்றும் அதி விரைவு ரயில்கள் போன்றவை இந்த மரணங்களுக்கு காரணம் என்று யானை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு ஒரு தீர்வினை கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ரயில் தண்டவாளம் அருகே யானை ஒன்று இருப்பதை பார்த்த ரயில் பைலட் அவசர பிரேக்கை உபயோகித்து அந்த யானையை காப்பாற்றியுள்ளார். இதுதொடர்பாக வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி(IFS) சுசாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த யானை அடிபடுவதில் இருந்து காப்பாற்றிய பைலட் T.துரை மற்றும் P.குமார் ஆகியோருக்கு நன்றி கூறி யானையின் வீடியோவையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக வனப்பகுதியில் வாழும் விலங்குகளுக்கு நாம் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செய்யும் விஷயங்கள், அவற்றுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதை மக்கள் உணர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
Image courtesy: Indian Express