ஆப்கன் அதிபர் நாட்டை விட்டு வெளியேறிய பின் வெளியிட்ட முதல் வீடியோ !

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி சென்ற பின் முதல் முறையாக அதிபர் அஷ்ரப் கனி வீடியோ மூலம் தன்னை பற்றிய செய்தியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார்.

Update: 2021-08-20 13:49 GMT

தலிபான் தாக்குதலில் இருந்து தப்பிச் சென்ற ஆஃப்கன் அதிபர் அஷ்ரப் கனி நேற்று முதன்முதலாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகம்(UAE) அஷ்ரப் கனி அபுதாபியில் தஞ்சம் அடைந்திருப்பதாக அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்தது. இதையடுத்து நேற்று இரவு தனது முகநூல் பக்கத்தில் அஷ்ரப் கனி அதிகாரபூர்வ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஆஃப்கன் தலிபான்களிடமிருந்து தப்பியோடிய பிறகு அவர் வெளியிட்ட முதல் வீடியோ அது. வீடியோவில் தான் நாட்டிலிருந்து தப்பியோடியதற்கான காரணத்தை விளக்கியிருக்கிறார். இது தற்போது சமூக வலைதளங்களில் உலக நாடுகளால் பரபரப்பாகப் உற்று நோக்கப்படுகிறது. 


ஒருவேளை தான் தலைநகரை விட்டு வெளியேறி இருக்காவிட்டால் பெருத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் என்றும் அதனைத் தவிர்க்கவே அந்த முடிவை தான் எடுத்ததாகவும் அந்த வீடியோவில் பேசியுள்ளார். தான் பாதுகாப்பாக வெளியேற உதவிய ஆஃப்கன் பாதுகாவலர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், அமைதிக்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததுதான் தலிபான் ஆக்கிரமிப்புக்கான காரணம் என்று அவர் தனது வீடியோவில் குறிப்பிட்டு உள்ளார். 




மனிதாபிமான அடிப்படையில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்றதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் சொத்துக்களை அஷ்ரப் கனி திருடிச்சென்றிருப்பதாகவும், அவரை ஒப்படைக்கவேண்டுமெனவும் தலிபான்கள் பிற நாட்டு தூதரகங்களிடம் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இனிமேல் நடக்க இருப்பது என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. இருந்தாலும் தலிபான்கள் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரவே ஆப்கானிஸ்தான் மக்கள் விரும்புகிறார்கள். 

Input:https://m.timesofindia.com/world/south-asia/afghan-president-ashraf-ghani-releases-video-1st-since-fleeing-kabul/amp_articleshow/85445607.cms

Image courtesy:times of India 



Tags:    

Similar News