இந்தியா வந்தடைந்த ஆப்கன் நாடாளுமன்ற உறுப்பினரின் உருக்கமான பேட்டி !

ஆப்கானிஸ்தானில் இருந்த இந்தியாவை வந்தடைந்த நாடாளுமன்ற உறுப்பினரான நரேந்தர் சிங் கல்சா அவர்கள் உருக்கமான பேட்டி அளித்துள்ளார்.

Update: 2021-08-22 13:31 GMT

தற்பொழுது ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைபற்றியுள்ளனர். ஆப்கனில் பல்வேறு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். குறிப்பாக ஆப்கன் தலைநகரான காபூலில் 400க்கு மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அங்குள்ள இந்தியர்களை இங்கு அழைத்து வர தொடர்ந்து முயற்சி மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படையின் C17 விமானம் செல்லப்பட்டது. 


இதன் காரணமாக விமான நிலையத்தில் வந்து சேர்ந்த 150 இந்தியர்களையும் தலிபான்கள் சுற்றி வளைத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து இந்தியர்களை மீட்க தலிபான்களுடன், இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிலையில் இன்று காலை 107 இந்தியர்கள் உள்பட 168 பேரை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் C17 விமானம் காபூலில் இருந்து இந்தியா வந்தடைந்துள்ளது. இந்த விமானத்தில் இந்தியர்கள் அல்லாமல் ஆப்கனைச் சேர்ந்த இந்துக்களும், சீக்கியர்களும் அகதிகளாக இந்தியாவுக்கு வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 



காபூலில் இருந்து இந்தியா திரும்பிய ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் நரேந்தர் சிங் கல்சா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் கூறுகையில், "எனக்கு அழுகை வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் மறுகட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டோம். ஆப்கன் ஜனநாயக பாதைகக்கு திரும்பி வந்தநிலையில், தற்போது மீண்டும் தலிபான்களிடம் சிக்கிக் கொண்டது. இப்போது அனைத்தும் முடிந்து விட்டன. காபூலில் இருந்து எங்களை மீ்ட்டு வர நடவடிக்கை எடுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் உருக்கமான தனது கருத்துக்களை கூறியுள்ளார். இவருடைய இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் ஆப்கானிஸ்தான் மக்களின் உண்மை நிலையை விளக்குகிறது.  

Input: https://www.ndtv.com/india-news/watch-everything-built-in-last-20-years-finished-says-afghan-mp-2515981

Image courtesy:NDTV news

 


Tags:    

Similar News