இந்தியர்களுக்கு முழு மனதாக தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரிட்டிஷ் பிரதமரின் வீடியோ !
இந்தியர்களின் பங்களிப்பு இல்லாமல்போயிருந்தால் பிரிட்டன் இன்றைக்கு ஒருசிறிய நாடாக இருந்திருக்கும் பிரிட்டிஷ் பிரதமர்.
தற்பொழுது ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோவில் நடந்த COP26 காலநிலை உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் இடையே அமைந்துள்ள நட்பும் முழுமையாக அனைவராலும் பார்க்க முடிந்தது. உச்சிமாநாட்டிற்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்தியாவின் தடுப்பூசி அங்கீகாரத்தை இங்கிலாந்து அரசு ஏற்க மறுத்தது. இதனால் இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையில் விரிசல் ஏற்பட்டதாக உலக மக்களால் பார்க்கப்பட்டது. இந்தியாவில் அனைத்து மக்களால் போடப்படும் தடுப்பூசியான Covishield/AstraZeneca தடுப்பூசிகளை லண்டன் அங்கீகரிக்க மறுத்ததைத் தொடர்ந்து, இந்திய பயணிகளை கட்டாய தனிமைப்படுத்தல் மற்றும் சோதனைக்கு உட்படுத்தியதைத் தொடர்ந்து சமீபத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே பெரும் இராஜதந்திர சண்டை ஏற்பட்டது.
லண்டன் இறுதியாக இந்தியாவிலும் தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளித்து அறிவித்தது. எனவே இத்தகைய அரசியல் ரீதியான வாக்குவாதங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, மற்ற நாடுகளில் கொண்டாடப்படும் விழாக்களில் உலக தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள், தீபாவளி பண்டிகைக்கான தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதில் குறிப்பாக அவர் கூறுகையில், "இந்தியர்களின் மகத்தான பங்களிப்பு இல்லாமல் போயிருந்தால் பிரிட்டன் இன்றைக்கு ஒரு சிறிய நாடாக இருந்திருக்கும். எனவே இங்கு வாழும் அனைத்து இந்திய மக்களுக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள்" என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே போரிஸ் ஜான்சன் அவர்களின் தீபாவளி வாழ்த்துக்கள் கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அதைப் போல இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதில் இருந்து இந்திய வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி வருகிறார். COP26 காலநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரோம் மற்றும் இங்கிலாந்துக்கு 5 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் செவ்வாய்க்கிழமை டெல்லி வந்தடைந்தார். பிறகு இன்று காலை ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக தீபாவளியைக் கொண்டாடுகிறார். இந்த செய்திதும் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
Input & Image courtesy: Twitter post