சி-பேஸ் மையம் பற்றி உங்களுக்கு தெரியுமா... மத்திய அரசு கொண்டு வந்த சூப்பர் ஸ்டெப்..
கார்ப்பரேட் நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்கு சி-பேஸ் எனும் மையம் உருவாக்கப் பட்டுள்ளது.
நாளுக்கு நாள் இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக அளவில் ஊடுருவில் வருகிறது. குறிப்பாக உள்ளூர் மக்களின் வியாபாரத்தை நசுக்கும் எண்ணத்துடன் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை கண்காணித்து அவ்வாறு சட்டத்திற்கு எதிராக செயல்படும் கார்ப்பரேட் நிறுவனங்களை இங்கிருந்து நீக்குவதற்காக மத்திய அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சி-பேஸ் எனும் மையம் உருவாக்கப்பட்டு விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு அவை மார்க்கெட்டில் இருந்து விடுபடுவதற்கான வழிவகைகளை செய்கிறது.
வணிக நிறுவனங்கள் தடையின்றி எளிதாக வணிகம் செய்வதற்கான செயலாக்க மையத்தை (சி-பேஸ்) மத்திய பெருநிறுவன விவகார அமைச்சகம் உருவாக்கியுள்ளது. மத்திய பெருநிறுவன விவகார அமைச்சகம் (MCA) நிறுவனங்களின் செயல்முறையை மையப்படுத்த, சி-பேஸ் என்னும் மையத்தை உருவாக்கியுள்ளது. நிறுவனங்களுக்கு உரிய தரவுகளை தடையின்றி வழங்கி அவற்றின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும், பதிவேட்டை முறையாகப் பராமரிப்பதற்கும் இது வகை செய்யும். வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும் இது உதவுகிறது.
நிறுவனங்கள் வெளியேறுவதை எளிதாக்குவதற்கும் சமீப காலங்களில் மத்திய பெருநிறுவன விவகார அமைச்சகம் எடுத்த பல நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் இது. சி-பேஸ் அலுவலகத்தை மே 1ந்தேதி மத்திய பெருவணிக விவகார அமைச்சகத்தின் ஆய்வு மற்றும் விசாரணை இயக்குநர் ஆர்.கே. டால்மியா தொடங்கி வைத்தார். ஹரிஹர சாஹூ, அலுவலகத்தின் முதல் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Input & Image courtesy: News