கோவா பசுமை சர்வதேச விமான நிலையம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

கோவா பசுமை சர்வதேச விமான நிலையத்திற்கு மறைந்த மனோகர் பாரிக்கர் பெயர்.

Update: 2023-01-06 02:28 GMT

மறைந்த மனோகர் பாரிக்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கோவா பசுமை சர்வதேச விமான நிலையத்திற்கு அவருடையப் பெயரை வைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலை தற்போது அளித்து இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கோவா மாநிலத்தின் 4 முறை முதல்வராகவும், மத்தியப் பாதுகாப்பு அமைச்சராகவும், பதவி வகித்த மறைந்த மனோகர் பாரிக்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவருடையப் பெயரை கோவா பசுமை சர்வதேச விமான நிலையத்திற்கு வைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.


கோவா மாநில பொதுமக்களின் நன்மதிப்பை பெற்ற மறைந்த மனோகர் பாரிக்கரை நினைவு கூறும் வகையில், கோவா பசுமை சர்வதேச விமான நிலையத்திற்கு ‘மனோகர் சர்வதேச விமான நிலையம், கோவா’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த 2022 –ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கோவா பசுமை விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தது நினைவிருக்கலாம்.


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் தான் பசுமை விமான நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.  குறிப்பாக சுதந்திரம் அடைந்து நாம் 75 ஆண்டுகளை கடந்து விட்டோம். தற்போது வரை இந்தியாவில் மொத்தமாக சுதந்திரப் அடைவதற்கு பிறகு மற்றும் மோடி அவர்கள் ஆட்சி அமைப்பதற்கு முன்பு மொத்தமாக மூன்று விமான நிலையங்களை இருந்தது தற்பொழுது இதன் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து இருக்கிறது.  

Input & Image courtesy: News

Tags:    

Similar News