சோனியாவுக்கு சிலை வைத்த நீங்கள்லாம் பேசலாமா? துறவியை இழிவுபடுத்திய காங்கிரசுக்கு நெட்டிசன்கள் பதிலடி.!

சோனியாவுக்கு சிலை வைத்த நீங்கள்லாம் பேசலாமா? துறவியை இழிவுபடுத்திய காங்கிரசுக்கு நெட்டிசன்கள் பதிலடி.!;

Update: 2020-12-24 07:15 GMT

நாடு முழுவதும் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரி இடையே இருந்த கள்ளத் தொடர்பைப் பார்த்ததால், இளம் கன்னியாஸ்திரி கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து விவாதித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், அது பற்றி கருத்து எதுவும் கூறாத காங்கிரஸ் கட்சியை பலரும் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் கேரள காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தில் பா.ஜ.க தலைவர்கள் ஒரு சமண முனிவரை சந்தித்து ஆசி பெற்றதை இழிவாக விமர்சித்து பதிவிட்ட ட்வீட் வைரலாகிக் கொண்டு இருக்கிறது. "பா.ஜ.க தலைமை இப்படிப்பட்ட மதத் தலைவர்களைத் தான் வணங்குகிறது. இப்படி இருக்கும் போது நமது நாடு முன்னேற எதாவது வாய்ப்பு இருக்கிறதா? இது நம்மை 600 ஆண்டுகள் பின்னே இழுத்துச் செல்லப் போகிறது" என்று கேரள காங்கிரஸ் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

அமைதியான, புழு, பூச்சிகளைக் கூட துன்புறுத்தாத சமண மதத் துறவிகளை இழிவுபடுத்தி காங்கிரஸ் இவ்வாறு பதிவிட்டதை பலரும் விமர்சித்து வருகின்றனர். இத்தாலிக்காரர்கள் தலைமையில் இயங்கும் காங்கிரஸ் கட்சி எப்படி இந்திய, இந்து மதப் பிரிவுகளுக்கு மதிப்பளிக்கும் என்று விமர்சிக்கப்படுகிறது.

 

மேலும் மறைந்த பிரதமரும் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த வருமான இந்திரா காந்தி இதேபோன்று சமண துறவி ஒருவரை சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டு காங்கிரஸ் தன் சொந்த வரலாற்றையே மறந்து விட்டதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். திகம்பர முனியைச் சந்தித்து ஆசி பெற்ற பின்னர் தான் 'ஹஸ்த' முத்திரை அல்லது 'கை' சின்னத்தையே இந்திரா காந்தி தேர்ந்தெடுத்தார் என்று ஜெயின்கள் பலர் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

 

 

சிலர் சிறுபான்மையினரின் மத நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தும் இந்த செயலுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தெலங்கானாவில் சோனியா காந்திக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலை வைத்து வழிபட்ட சம்பவத்தையும் பலர் சுட்டிக்காட்டி இவரை வழிபட்டால் 600 ஆண்டுகள் முன்னே போய் முன்னேறி விடுவோமோ என்று நக்கல் செய்து வருகின்றனர்.

 

முன்னர் ஒருமுறை ஹரியானா சட்டசபையில் சமணத் துறவி ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு உரை ஆற்றிய போதும் இது போன்றே காங்கிரசார் கீழ்த்தரமாக பேசியது குறிப்பிடத்தக்கது. இந்து விரோதத்தின் மொத்த வடிவமாக உருவெடுத்து இருக்கும் காங்கிரசின் உண்மை முகத்தை இப்போதாவது தெரிந்து கொண்டு இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் ஜெயின்கள் வாக்களிக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

Similar News