கஞ்சா, சரக்குன்னு கண்ணகி நகரே சீரழிஞ்சி போயிருக்கு.. காப்பாத்துங்க ஐயா! கதறும் பெண்கள்!

Update: 2022-04-20 01:27 GMT

சென்னையில் கண்ணகி நகர் என்றாலே போதைப்பொருள் துஷ்பிரயோகம், குற்றங்கள் என்ற நிலைக்கு மாற்றி வைத்துள்ளனர். அங்கே 24,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்.

குடிநீர், கழிவுநீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகள் கூட முழுமையாக் கிடைக்காத நிலையில் உள்ளனர். நான்கு நாட்களுக்கு ஒருமுறையே இங்கே தண்ணீர் வரும். அதையும் அடிப்பம்பின் மூலமே அடித்து எடுக்க வேண்டும்.

கண்ணகி நகர் என்கிற பெயரைப் பார்த்தவுடன் எங்கள் பிள்ளைகளை எந்த ஐடி நிறுவனமும் சேர்த்துக்கொள்வது இல்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். சொந்தவூரில் வாழும் அகதிகள் நாங்கள். எங்களை வேரோடு பிடுங்கி வந்து இங்கே எறிந்துவிட்டார்கள். கடலை நம்பியிருந்த நாங்கள் பிழைப்புக்கு வழியின்றி கிடைத்த வேலையைச் செய்தபடி வயிற்றைக் கழுவித் திரிகிறோம்.

சுனாமியிலிருந்து மீண்ட எங்களை, இந்தக் குழியில் பிடித்துத் தள்ளிவிட்டு விட்டார்கள்.மீன்பிடிக்கும் தொழிலே என்றால் என்னவென்றே தெரியாத ஒரு தலைமுறை இன்று வளர்ந்து நிற்கிறது என வேதனையுடன் கூறுகின்றனர். 

அங்கே மக்களுக்கு அடிப்படை தேவைகள் செய்து கொடுக்காமல், சென்னை மாநகராட்சியின் அழைப்பின் பேரில், கண்ணகி நகரைக் கலை நகரமாக மாற்றும் முயற்சியில் 'ஸ்டார்ட் ஆர்ட் இந்தியா பவுண்டேசன்' எனும் அமைப்பு ஈடுபட்டுள்ளது. வெளியில் அழகாக காட்டி என்ன பிரயோஜனம், அங்கே போதை வாஸ்துகளும், குற்றங்களும் அளவு கடந்து நடப்பதால், வேதனையில் பெண்கள் கதறுகின்றனர். 


Full View


 

Similar News