முதல்வரின் கான்வாய் வாகனத்தில் முகத்தை மறைத்தபடி தொங்கி சென்ற மேயர் பிரியா!

Update: 2022-12-10 13:02 GMT

முதல்வர் ஸ்டாலினின் கான்வாய் வாகனத்தில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொங்கியபடி பயணம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை, காசிமேட்டில் உள்ள மீனவ பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அங்கு மீன்பிடி துறைமுகத்தில் மாண்டஸ் புயலால் சேதமடைந்த படகுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து முதல்வரின் பாதுகாப்பு கான்வாய் வாகனம் அங்கிருந்து புறப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா அதில் தொங்கியபடியே பயணித்தார். முதல்வரின் கான்வாய் வாகனத்தின் இடதுபுறத்தில் மேயர் பிரியா நின்றுகொண்டே பயணித்த வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


Full View


Similar News