சீனாவில் அரங்கேறிய மிகப்பெரிய திருமணம்: வைரல் ஆகிவரும் 60 கிலோ தங்கப்பரிசு !
சீனாவின் வருங்கால கணவர் பரிசாக கொடுத்த 60 கிலோ தங்க நகைகளை அணிந்த மணப்பெண் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்தியாவில் குறிப்பாக திருமணத்தின் போது மணமகள் அதிகளவில் ஆபரணங்களை அணிவது குறிப்பாக தங்க நகைகள் மீது அவர்கள் கொண்டு இருக்கும் ஆவலும் நம்மால் பார்க்க முடியும். இந்தியாவில் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து பெண்களும் நகைகளின் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார்கள் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் காட்டுகிறது. அந்த நிகழ்வு என்னவென்றால், சீனாவில் மணப்பெண் ஒருவர் அணிந்து வந்த தங்கம் காண்போரை கிறுகிறுக்க வைத்துள்ளது. திருமணத்தன்று சுமார் 60 கிலோ தங்க நகைகளை அவர் அணிந்து வந்து, வருங்கால கணவரை கரம் பிடித்துள்ளார்.
இந்த சம்பவம் சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் நடைபெற்றுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெற்ற அந்த திருமணத்தில் மணப்பெண் வெள்ளை நிற உடை அணிந்திருக்கிறார். கைகளில் பூச்செண்டு ஒன்றை பிடித்திருக்கும் அந்தப் மணப்பெண்ணின் கழுத்து முழுவதும் தங்க ஆபரணங்கள் பல்வேறு வடிவங்களில், ஆபரணமாக செய்யப்பட்டு ஜொலிக்கிறது. 60 கிலோ தங்கமும் கழுத்து முதல் இடுப்பு வரை தொங்கவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த தம்பதியின் வீடியோ இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் தற்பொழுது மிகவும் வைரலாகியுள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள தகவலில், இருவரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சீனாவில் பெரும்பான்மையான நகரங்களில் பெண்களுக்கு சீதனம் கொடுத்து திருமணம் செய்து கொள்ளும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் இந்திய பெண்களுக்கும் இது போன்ற ஒரு நிகழ்வு தனக்கு நடக்குமா? என்று எதிர்பார்க்கும் அளவிற்கு இந்த வீடியோ அனைவர் மனதையும் கவர்ந்துள்ளது.
Input & image courtesy:Tribuneindia