சீனாவின் கனவை சுக்குநூறாகிய இந்தியா... அண்டை நாடுகளை ஏமாற்றும் தந்திரம்...
சீனாவின் மிகப்பெரிய கனவாக இருக்கும் அண்டை நாடுகளை கடன் வழியில் சிக்க வைக்கும் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளை சீனா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக அதிகமாக கடன்களை கொடுத்து இருக்கிறது. சீனா தனது Belt and Road திட்டத்தின் கீழ், உலக நாடுகளை கடன் வலையில் சிக்க வைக்கிறது. தற்போது சீனாவின் பிரதமராக இருக்கும் ஜி ஜின்பிங்கின் இந்த ஒரு திட்டத்தில் இந்தியா தனது தந்திரத்தை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் எல்லை நாடுகளை குறிவைத்து சீனா இந்த ஒரு திட்டத்தை அரங்கேற்றி வருகிறது. சீனாவின் கடனில் சிக்கியுள்ள இலங்கை, திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டது. பாகிஸ்தான் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிர்க்கிறது.
அண்டை நாடுகளை தன் பிடிக்குள் வைத்துக் கொள்ள, அவர்களுக்கு அதிக அளவில் கடன்களை அள்ளிக் கொடுத்து, அவர்களை அதிலிருந்து மீள முடியாத போது, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதே சீனாவின் திட்டம். குறிப்பாக இலங்கை மற்றும் பாகிஸ்தான் வழியாக இந்தியாவை அச்சுறுத்துவதே சீனாவின் மிகப்பெரிய திட்டம்.
குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் சீனாவின் இணைப்பு பொருளாதார திட்டமாக CPEC வழித்தட திட்டத்தை விரைவாக முடிக்க சீனா கூறி இருக்கிறது. இவற்றை தவிடு பொடி ஆக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்கா பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அங்கு அமெரிக்கா அதிபருடன் CPEC பற்றி பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். சீனாவின் CPEC வழித்தடத்தை பாகிஸ்தான் வழியாக கொண்டு செல்வதை இந்தியா கடுமையாக எதிர்க்கிறது மற்றும் அது சட்டவிரோதமானது என்று கருதுகிறது என கூறினார்.
Input & Image courtesy: News