கடன் ஆப்கள் மூலம் 500 கோடி சீனாவுக்கு அனுப்பியது உண்மையா? இந்திய மக்களுக்கு எச்சரிக்கை!
இந்தியாவில் இருந்து கடன் வழங்கும் செயலிகள் மூலமாக, சுமார் 700 கோடி சீனாவுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.
கடன் செயலிகள் மூலமாக இந்தியாவில் இருந்து சீனாவிற்கு தற்போது இணையதளம் வழியாக 500 கோடி ரூபாய் பணம் அனுப்பப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கடன் செயலிகள் மூலம் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதாகவும், கடனை செலுத்திய பிறகும் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படங்களை பயன்படுத்தி பணம் பறிப்பதாக நூற்றுக்கணக்கான புகார்கள் டெல்லி சிறப்பு பிரிவு போலீசாருக்கு வந்தவண்ணம் உள்ளன. அதன் பேரில் போலீசார் இந்த வழக்கை சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றி தீவிரமாக விசாரித்து வந்தது.
மேலும் கொடுக்கப்பட்ட புகார்களை அடுத்து ஆய்வு செய்த பொழுது தான் அதிர்ச்சியான சம்பவம் வெளிவந்துள்ளது. சுமார் 100க்கும் மேற்பட்ட மொபைல் போன் ஆப்கள் மூலமாக இந்த மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் இந்த ஆப்களை டவுன்லோட் செய்பவர்கள் இவற்றை நம்பி தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை கொடுத்து விடுகிறார்கள். மேலும் பயனாளர்களின் தொடர்புகள், தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள சர்வர்களில் பதிவேற்றம் செய்ததுடன் மற்றும் கிரிப்டோகரன்சி மூலம் லக்னோவில் உள்ள கால் சென்டர் வழியாக சீனாவுக்கு பணம் அனுப்புவதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 2 மாதத்தில் இருபத்தி இரண்டு இந்தியர்கள் இந்த மோசடி வழக்கில் ஈடுபட்டு உள்ளார்கள். அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதுவரை எத்தனை பெயர்களை ஏமாற்றினார்கள்? என்பது குறித்து போலீசார் தற்போது விசாரணை செய்து வருகின்றார்கள். கூடிய விரைவில் இது பற்றி மேலும் தகவல்கள் அறிவிக்கப்பட உள்ளன. எனவே மக்கள் அனைவரும் இத்தகைய கடன் வழங்கும் செயலிகளை நம்பி தங்களுடைய தனிப்பட்ட விவரங்களை தர வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Input & Image courtesy: Polimer News