கோவில் தாக்குதல்களை விசாரிக்கும் அதிகாரி கிறிஸ்தவ மதப் பரப்புரை? வைரலாகும் வீடியோ!

கோவில் தாக்குதல்களை விசாரிக்கும் அதிகாரி கிறிஸ்தவ மதப் பரப்புரை? வைரலாகும் வீடியோ!

Update: 2021-01-07 18:07 GMT

ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி ஒருவரே கிறிஸ்தவர்கள் கோவில்கள் மீதான தாக்குதல்கள் பற்றி விசாரிக்கத் கூடாது என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. எம்.பி. ராமகிருஷ்ண ராஜு முதல்வர், உள்துறை அமைச்சர், விசாரணை அதிகாரி, சி.ஐ.டி தலைமை அதிகாரி உட்பட அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்கும் போது இந்த வழக்கில் எப்படி இந்துக்களுக்கு நீதி கிடைக்கும் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

எனவே கிறிஸ்தவர் மற்றும் ரெட்டி அல்லாதவர்களைக் கொண்ட விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்திருந்தார். இந்நிலையில் சி.ஐ.டி தலைமை அதிகாரி சுனில் குமார் ஐ.பி.எஸ் இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டிஷாரைப் புகழ்ந்தும், கிறிஸ்தவ மதத்தை உயர்த்தியும் ஒரு நிகழ்ச்சியில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

 

கடந்த ஒரு வாரத்தில் ஐந்து கோவில்களில் இந்து விரோத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த வாரம் விஜயநகரம் ராம தீர்த்தம் கோவிலில் ராமர் சிலையின் தலை உடைக்கப்பட்டதில் தொடங்கிய சம்பவங்கள், சீதா தேவி சிலை உடைப்பு, சுப்பிரமணிய சுவாமி சிலையின் கைகள் துண்டிப்பு, கேது சிலை சேதம், அண்மையில் விநாயகர் சிலை கைகள் துண்டிப்பு என்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

 

எதிர்க்கட்சிகள் இவ்வாறு இந்து கோவில்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு அவரது கிறிஸ்தவ மத ஆதரவு நிலை தான் காரணம் என்று குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், ஆந்திர மாநில சி.ஐ.டி பிரிவின் தலைமை அதிகாரியாக பணிபுரியும் சுனில் குமார் ஐ.பி.எஸ், " பிரிட்டிஷார்‌ வந்து கடவுள் இல்லாத நமக்கு ஒரு கடவுளைத் தந்தார்கள். நம்மை கோவிலுக்குள் நுழைய விடாததால் நமக்கு தேவாலயம் கட்டிக் கொடுத்தார்கள்"

 

"இப்போது உங்களுக்கு கடவுள் இருக்கிறார் என்று கூறினார்கள். அவர்களால் தான் நமது முன்னோர் கல்வி கற்றனர். நாம் இப்போது கல்வி அறிவு பெற்றவர்களாக இருக்கக் காரணம் அவர்கள் தான்" என்று பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்படி வெளிப்படையாக கிறிஸ்தவ மதத்தை ஆதரித்தும் இந்து மதத்தைப் பழித்தும் பேசுபவர் இந்து கோவில்கள் மீதான தாக்குதல் பற்றி எவ்வாறு நடுநிலையாக விசாரணை மேற்கொள்வார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Similar News