கைவிட்ட தேவாலயம்..கையை வெட்டிய இஸ்லாமிய கும்பல்.. தற்கொலை செய்துகொண்ட மனைவி - பேராசிரியர் வாழ்வை புரட்டிப்போட்ட வினாத்தாள்!

Church Treated Me Worse, Says Christian Professor from Kerala Whose Palm Was Chopped Off Over 'Blasphemy'

Update: 2021-09-23 00:45 GMT

Prof T J Joseph in hospital after the attack on him.

2010 ஆம் ஆண்டில், கேரளாவில் ஒரு கல்லூரி பேராசிரியர் முகமது நபியை அவதூறு செய்ததாக, இஸ்லாமிய குழுக்கள் அவர் அமைத்த கேள்வித்தாள் மீது குற்றச்சாட்டு முன்வைத்தனர். 

பேராசிரியர் டி ஜே ஜோசப், வடிவமைத்த வினாத்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள "முகமது" என்பது "பி டி குஞ்சு முகமது" என்ற எழுத்தாளரைக் குறிப்பிடுகிறது. அது முகமது நபியை குறிக்கவில்லை. இதனை புரிந்துகொள்ளாமல்  அல்ல, ஜோசப் மீது வெறுப்பை உமிழ்ந்தனர். 

இறுதியில், ஒரு கும்பல் அவரைப் பிடித்தது, பொதுவில் அவரது கையை வெட்டியது. இந்த சம்பவம் நடந்து பதினோரு வருடங்கள் கழித்து, மலையாளத்தில் எழுதப்பட்ட ஜோசப்பின் வாழ்க்கை கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது விரைவில் வெளியிடப்பட உள்ளது. 

டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், ஜோசப் திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

தன்னை "வேண்டுமென்றே தவறாக சித்தரித்ததன்" விளைவாக - தேவாலயம் மற்றும் அவர் கற்பித்த கிறிஸ்தவக் கல்லூரி நிர்வாகம், அவருக்குப் எதிராக திசை திரும்பின. 

கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கல்லூரி குற்றம் சாட்டியதாகவும், இறுதியில் அவரை பதவி நீக்கம் செய்ததாகவும் ஜோசப் கூறினார். தேவாலயம் அவரது குடும்பத்தை வெளியேற்றியது. கொத்தமங்கலம் மறைமாவட்டத்தில் உள்ள 120 தேவாலயங்களில் அவரை பணிநீக்கம் செய்ததை நியாயப்படுத்தி, அவர்கள் ஆயர் கடிதங்களைப் பெற்றனர்.

ஜோசப் தனது வருமானத்தை இழந்தது மட்டுமல்லாமல், தேவாலயத்துக்கு பயந்து நண்பர்களையும் இழந்தார். அவதூறு வழக்குக்கு எதிரான சட்ட போராட்டம் அவரது குடும்பத்தை பாதித்தது. அவரது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டது. அவர் நவம்பர் 2013 இல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் விடுவிக்கப்பட்ட போதிலும், அவரது கல்லூரி - தொடுபுழா நியூமன் கல்லூரி - அவரை மீண்டும் சேர்க்க மறுத்தது. மனச்சோர்வு நோயால் பாதிக்கப்பட்ட அவரது மனைவி நான்கு மாதங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டார்.

தனக்கு கை வெட்டப்பட்டதை விட தேவாலயம் நடந்துகொண்ட விதம் தன்னை அதிகம் பாதித்துவிட்டதாக பேராசிரியர் ஜோசப் ஒப்புக்கொண்டார்.

Tags:    

Similar News