#ChurchUnsafe4Women ட்ரெண்ட் செய்த கணக்குகள் முடக்கம் - வாட்டிகன் கைக்கூலியா ட்விட்டர்.?

#ChurchUnsafe4Women ட்ரெண்ட் செய்த கணக்குகள் முடக்கம் - வாட்டிகன் கைக்கூலியா ட்விட்டர்.?

Update: 2020-12-03 06:40 GMT

கிறிஸ்தவ அமைப்புகளில் பெண்களுக்கு நமக்கும் கொடுமைகள் அனைவரும் அறிந்ததே. அவற்றில் அதிகாரத்தில் இருக்கும்‌ பாதிரியார்கள் செய்யும் தவறுகளும் செய்திகளில் வந்த வண்ணம் தான் உள்ளன. கடந்த வாரத்தில் கூட ஒரு பாதிரியார் 13 வயது மலைவாழ் சிறுமியை கடத்தியது, மற்றொருவர் திருமணத்துக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் திருமணம் செய்து கொள்ள மறுத்தது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தன.

தமிழகத்தில் மட்டுமே இப்படி என்றால் உலகம் முழுக்க எத்தனை சம்பவங்கள் நடந்திருக்கும்? முன்னர் பணியிடங்களில் நடக்கும் பாலியல் அத்துமீறல் குறித்து #MeToo என்ற ஹேஷ்டாக் சமூக ஊடகங்களில் ட்ரெண்டான போது, #ChurchToo என்ற பெயரில் கிறிஸ்தவ அமைப்புகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் பற்றிய பல தகவல்கள் வெளி வந்தன. 

இப்போது அதே போன்று #ChurchUnsafe4Women என்ற ஹேஷ்டாக்கில் தேவாலயங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டனர். இந்த ஹேஷ்டாக்கில் ட்விட்டரில் பதிவிட்ட 37 இந்திய ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் நிர்வாகம் முடக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சர்ச்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது தினசரி நிகழ்வாகி விட்டது என்றும் சர்ச்சுக்கு செல்வது பெண்களுக்கு பாதுகாப்பானது தானா என்றும் கேள்வி எழுப்பி ஒருவர் பதிவிட்டு இருந்தார்.

 

 

கேரள கன்னியாஸ்திரி ஒருவர் பிராங்கோ முல்லக்கல் என்ற பாதிரியாரால் பல முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போதும் அவரை கைது செய்வதை காவல்துறை தாமதப்படுத்தியதையும், 21 நாட்களில் அவருக்கு பெயில் வழங்கப்பட்டது பற்றியும் பதிவிட்ட ஒருவர், இந்து சாமியார்களுக்கு அநீதி இழைக்கப்படுவது பற்றி குறிப்பிட்டார்.

 

 

சென்னை லயோலா கல்லூரியில் மேரி என்ற பணியாளருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த பாதிரியார் சேவியர் அல்போன்ஸ் பற்றி பதிவிட்ட ஒருவர், சட்டம் அவருக்கு விரைவில் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரினார்.

 

 

மற்றொருவர் வடக்கிலிருந்து தெற்கு வரை குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும், மத மாற்றத்துக்கு உட்படுத்தும் சர்ச் நடவடிக்கைகளை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

 

 

இந்திய அளவில் 95,000 பதிவுகளுடன் 2500 ட்விட்டர் கணக்குகள் #ChurchUnsafe4Womenஐ

ட்ரெண்ட் செய்த நிலையில் அவற்றில் 37 கணக்குகள் எந்த காரணமும் தெரிவிக்காமல், முன்னறிவிப்பும் செய்யாமல் முடக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகின்றது. பயனாளர்களிடம் இருந்து அவர்களது பதிவுகளுக்கு விளக்கம் கேட்ட பின்னரே நடவடிக்கை எடுக்கும் வழக்கம் இருக்கும் நிலையில், நடைமுறைகளைப் பின்பற்றாமல் தான் தோன்றித் தனமாக ட்விட்டர் இந்த கணக்குகளை முடக்கியுள்ளது.

 

இதையடுத்து ட்விட்டரின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளதாகவும், வாட்டிகனின் கை எது வரை நீள்கிறது என்பதையே ட்விட்டரின் இந்த செயல்பாடு காட்டுகிறது என்றும் ட்விட்டர் பயனர்கள் விமர்சித்து வருகின்றனர்.





 

Source: https://www.organiser.org/Encyc/2020/12/2/Twitter-suspends-37accounts.html

Similar News