வாட்ஸ் அப்பில் விரைவில் வரவிருக்கும் இரண்டு புதிய அப்டேட்கள் என்னென்ன?

வாட்ஸ் அப்பில் விரைவில் வரவிருக்கும் இரண்டு புதிய அப்டேட்கள் என்னென்ன?

Update: 2020-10-26 17:37 GMT

Wabetainfo இன் சமீபத்திய அறிக்கையின்படி, அடுத்து வரவிருக்கும் வாட்ஸ்ஆப்களில் இன்னும் பல புதிய அப்டேட்கள் வர வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. Wabetainfo அப்டேட் டிராக்கர், வாட்ஸ்அப்பின் சமீபத்திய பீட்டா APK அப்டேட்டில் வளர்ச்சியில் உள்ள புதிய அம்சங்களின் அப்டேட்கள் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



 

இந்த முறை, ஜாயின் மிஸ்டு கால் அம்சம் என்று அழைக்கப்படும் Join Missed Call அம்சத்தை சோதனை செய்து வருகிறது. இதன் பெயர் குறிப்பிடுவது போல, வாட்ஸ் அப்பை பயன்படுத்துவோர் அவர்கள் முன்பு தவறவிட்ட குரூப் வீடியோ அல்லது வாய்ஸ் அழைப்பில் மீண்டும் சேர அனுமதிக்கிறது. அழைப்பு ஆக்டிவில் தொடர்ந்து இருந்தால் மட்டுமே, இந்த அம்சத்தை வாட்ஸ் அப்பை பயன்படுத்துவோர் பயன்படுத்த முடியும். அழைப்பு முடிந்துவிட்டால், அழைப்பில் சேருவதற்கான ஆப்ஷன் ஸ்கிரீனில் தோன்றாது.



 

வளர்ச்சியின் கீழ் உள்ள மற்றொரு அப்டேட் பயோமெட்ரிக் அங்கீகாரம் ஆகும். தற்போது, ​​Android வாட்ஸ்அப்பில், நீங்கள் செக்யூரிட்டி விருப்பத்தை இயக்கியிருந்தால், வாட்ஸ் அப்பை திறப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாகக் கைரேகை லாக்கிங் பாதுகாப்பு உங்களுக்கு பயன்படுத்தக் அனுமதிக்கிறது. அதேபோல் இப்போது, ​​இனி கைரேகையுடன் வருங்காலத்தில் வாட்ஸ்அப்பைத் திறக்க முக அங்கீகாரம் அதாவது ஃபேஸ் ரீடிங் போன்ற பிற பாதுகாப்பு மோடுகளையும் நீங்கள் பயன்படுத்த முடியும்.

இந்த இரண்டு அம்சங்களும் தற்போது எக்ஸ்பயிரிங் மீடியா பியூச்சர் (Expiring Media feature), பிசினஸ் அனுபவத்திற்கான ஷார்ட்கட், புதிய கால் பட்டன் மற்றும் பல புதிய அம்சங்களுடன் தற்போது சோதனையில் உள்ளது. இவை முழுமையாக வளர்ச்சி அடைந்த பின்பு, புதிய வாட்ஸ்அப் அப்டேட் வெர்ஷனில் வெளியிடப்படும் என்று Wabetainfo தரப்பில் தெரிவித்துள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து புதிய அம்சங்களும் தற்போது வளர்ச்சியில் உள்ளன. இவை எப்போது அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்பது குறித்த தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Similar News