இனி வேண்டாதவர்களின் தொல்லையில் இருந்து தப்பிக்க வாட்ஸ்அப் வெளியிட்ட அசத்தல் அப்டேட்!

இனி வேண்டாதவர்களின் தொல்லையில் இருந்து தப்பிக்க வாட்ஸ்அப் வெளியிட்ட அசத்தல் அப்டேட்!;

Update: 2020-10-27 14:04 GMT
வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப உலகில் உடனடியாக செய்திகளைப் பகிர்வதற்கும், தகவல்களைப் பரிமாற்றம் செய்வதற்கும் பல ஆப்கள் அதாவது செயலிகள் உள்ளன. அவற்றுள் பரவலான மக்களால் பயன்படுத்தக்கூடிய ஆப்பாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. மற்ற செயலிகளை விட இதன் வேகமும், எளிமையாகக் கையாளும் முறையும் சாதாரண மக்கள் பயன்பாடு முதல் அலுவலகப் பயன்பாடு வரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இதனை மாற்றியிருக்கிறது.


அதே நேரத்தில், பணி அல்லது உறவு நிர்பந்தம் காரணமாகச் சில நபர்களிடமோ அல்லது சில குழுவிலோ நாம் வாட்ஸ்அப் வாயிலாக தொடர்பில் இருக்க வேண்டி வரும். அவர்கள் அனுப்பும் செய்திகளை முழுமையாக நம் கவனத்திற்குக் கொண்டு வரமால் இருக்க, எந்த வழியும் இல்லாமல் இருந்தது. இந்த குறையைப் போக்கும் வகையில் தற்போது வாட்ஸ்அப் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக ஒரு குழுவில் அனைவரும் சாட் செய்யும்போது தொடர்ந்து 'நோட்டிபிகேஷன்' வந்த வண்ணம் இருக்கும். அல்லது தனிப்பட்ட ஒருவர் தொடர்ந்து மெசேஜ் அனுப்பும் பட்சத்தில், அந்த தனிப்பட்ட சாட்-யை மட்டும் நோட்டிபிகேஷன் வராமல் நிறுத்தி வைக்கும் வசதி ஏற்கனவே வாட்ஸ்ஆப்பில் உள்ளது. 


ஆனால், இதற்கான ஆப்ஷன்களில் 8 மணி நேரம், ஒரு வாரம் என அதிகபட்சமாக ஓராண்டு வரையில் நிறுத்தி வைக்க முடியும் என்றிருந்தது. இந்நிலையில், நிரந்தரமாக நிறுத்தி வைக்கும்(Mute) வசதியை வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் ஆப்ஷனில் 'ஆல்வேய்ஸ்'(always) என்பதை தேர்வு செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன் வரவில்லை எனில், பிளே ஸ்டோருக்குச் சென்று வாட்ஸ்ஆப்-ஐ அப்டேட் செய்யுங்கள்.

Similar News