சுற்றுச்சூழல் மீது அக்கறையுடன் புதிய உறுதிமொழி எடுத்தது கூகுள்!

சுற்றுச்சூழல் மீது அக்கறையுடன் புதிய உறுதிமொழி எடுத்தது கூகுள்!

Update: 2020-10-28 16:32 GMT

கூகுள் நிறுவனத்தினால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிக்சல் 5 ஸ்மார்ட்போன்கள் மற்றும் நெஸ்ட் ஆடியோ ஸ்பீக்கர்கள் உட்பட தயாரிப்புகள் அனைத்தும் இப்போது மறுசுழற்சி செய்யக்கூடிய பொருளைப் பயன்படுத்துவதாக கூகிள் தற்போது அறிவித்துள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிக்சல் 5 இன் பின்புற பாகங்கள் 100% மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்துடன் தயாரிக்கப் பட்டு உள்ளது. மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் தொலைபேசி இதுவாகும்.

இது புதிய அலுமினியத்தின் பயன்பாட்டை நீக்குவதோடு கழிவுகள் சேர்வதையும் குறைக்கிறது. மேலும், முதன்முறை அலுமினியத்தைப் பயன்படுத்துவதை ஒப்பிடும்போது உற்பத்தி செய்யப்படும் கார்பன் அளவை 35% குறைக்கிறது. மேலும், சமீபத்திய நெஸ்ட் தெர்மோஸ்டாட்டைப் பொறுத்தவரை, டிரிம் பிளேட் 75% மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மின் பொருட்கள் தயாரிப்பில் மறுசுழற்சி செய்யப்பட்டு கூடிய பொருட்களை பயன்படுத்துவது சுற்றுச் சூழலுக்கு ஏற்றதாக உள்ளது மேலும் கூகுள் நிறுவனத்தை ஆதரிப்பதற்காக அதனுடைய முதலீட்டாளர்களும் இச்செயல் மிகவும் கவர்ந்துள்ளது.



100 % கார்பன் நடுநிலையுடன் கூடிய பொருட்களை நுகர்வோருக்கு நேரடியாக அனுப்புவதை தொடர்ந்து பராமரித்து வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டிற்குள் 100 சதவீத பிளாஸ்டிக் இல்லாத மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பேக்கேஜிங் அதன் அனைத்து தயாரிப்புகளுக்கும் வழங்கப்படும் என்றும் கூகிள் நிறுவனம் தரப்பிலிருந்து உறுதியாக தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் இறுதியில் அனைத்து இறுதி அசெம்பிளி உற்பத்தி தளங்களிலும் UL 2799 ஜீரோ வேஸ்ட் டு லேண்ட்ஃபில் சான்றிதழை அடைவதற்கு இலக்கை கூகிள் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த சான்றிதழ் தயாரிப்பு நடவடிக்கைகளில் இருந்து வரும் பெரும்பாலான கழிவுகளை மறுசுழற்சி செய்ய முடியும் என்பதற்கானதாகும்.

Similar News