டிஜிட்டல் போதையாக உருவெடுத்த பப்ஜி கேம் - உங்கள் போனில் இருந்தாலும் இனி விளையாட முடியாது.!

டிஜிட்டல் போதையாக உருவெடுத்த பப்ஜி கேம் - உங்கள் போனில் இருந்தாலும் இனி விளையாட முடியாது.!

Update: 2020-10-30 18:01 GMT
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் பப்ஜி கேம் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, பல பேருடைய மனதை கட்டுப்படுத்தும் ஒரு போதை பொருளாக இந்த பப்ஜி கேம் மாறி உருவெடுத்து இருந்திருக்கிறது. தற்போது இந்தியாவில் பப்ஜி முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலநாடுகளில் தடை செய்யப்பட்ட இந்த கேமை தற்போதும் 5 கோடி பேர் தொடர்ந்து இந்த விளையாட்டை விளையாடி வருகின்றனர் என்பதும் அனைவருக்கும் தெரியும். 


 பப்ஜி கேமுக்கு பல இளைஞர்கள் அடிமையாகி தற்கொலை செய்யும் அளவிற்கு டிஜிட்டல் போதையாக இந்த கேம் உருவெடுத்தது. இதன் காரணமாக மத்திய அரசு பப்ஜி செயலியை ஏற்கனவே தடை செய்திருந்தது. ஆனால் ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்கள் இன்னும் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இந்தியாவிலிருந்து முழுமையாக பப்ஜி நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது தகவல் உண்மையா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ளலாம்.



 இனி பப்ஜி மொபைல் மற்றும் பப்ஜி மொபைல் லைட் போன்ற கேம்களை பயன்படுத்தி வந்தோர், அக்டோபர் 30 முதல் இந்தியாவில் இந்த கேம்களை நீங்கள் விளையாட முடியாது. அதாவது இந்தியாவில் இந்த கேம் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தற்போது செய்திகள் கிடைத்துள்ளது. தற்போது முதல் இரு விளையாட்டுகளுக்கும் இந்தியாவில் பயனாளர்கள் அனைத்து சேவைகளையும் நிறுத்த போவதாக டென்செட் கேம்ஸ் அறிவித்ததை அடுத்து இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது. எளிமையாக சொல்லப்போனால், நீங்கள் இந்த விளையாட்டை ஏற்கனவே பதிவிறக்கம் செய்து இருந்தாலும் அல்லது APK நிறுவப்பட்டு இருந்தாலும் பப்ஜி மொபைல் இனி இயக்க முடியாது.





Similar News