இந்திய ராணுவம் உருவாக்கியுள்ள வாட்ஸ்அப் போன்ற ஒரு புதிய ஆப்.!
இந்திய ராணுவம் உருவாக்கியுள்ள வாட்ஸ்அப் போன்ற ஒரு புதிய ஆப்.!
பிரதமர் மோடியின் 'ஆத்மனிர்பர் பாரத் மிஷன்' க்கு இணங்க, இந்திய ராணுவம் பாதுகாப்பான வாட்ஸ்அப் போன்ற தகவலை பரிமாற்றம் ஒரு புதிய ஆப்பை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஆப்பிற்கு"செக்யூர் அப்ளிகேஷன் ஃபார் இன்டர்நெட் அல்லது சாயி" (Secure Application for the Internet or SAI) என்று இந்திய ராணுவம் பெயரிட்டுள்ளது.
இந்திய ராணுவ வீரர்கள் ஒரு பாதுகாப்பான மெசேஜிங் சேவையை வழங்கும் நோக்கத்தில் இந்திய ராணுவம் இந்த சாயி செயலியை தற்போது உருவாக்கியுள்ளது. இந்த புதிய பயன்பாடு இப்பொழுது அண்ட்ராய்டு தளங்களில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. மிக விரைவில் iOS தளத்திலும் இந்த பயன்பாடு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் முழுமையான பாதுகாப்புடன் குரல் அழைப்பு மற்றும் வீடியோ அழைப்பு சேவைகளுக்கான மெசேஜிங் அனுபவத்தை இந்த ஆப் வழங்குகிறது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புலனாய்வு அமைப்புகளுக்கு எந்தவொரு முக்கியமான தகவலும் கசிவதைத் தடுக்க இந்த பயன்பாடு தொடங்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் தெரிவித்துள்ளது.
இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மெசேஜிங் செயல்பாடுகளை CERD - இன் எம்பனேல்ட் ஆடிட்டர் மற்றும் ஆர்மி சைபர் குழுமம் இந்த ஆப்பை பற்றி ஆய்வு செய்துள்ளது. மேலும் NIC யில் உள்கட்டமைப்பை வழங்கும் அறிவுசார் சொத்துரிமை (IRB) தாக்கல் செய்வதற்கான செயல்முறை நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "இந்த ஆப் வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய மற்ற ஆப்புகள் ஆன வாட்ஸ்அப், டெலிகிராம், சாம்வாட் (SAMVAD) மற்றும் ஜிம்ஸ் (GIMS) போன்றது மற்றும் எண்டு-டு-எண்டு என்கிரிப்ஷன் மெசேஜிங் நெறிமுறையைப் பயன்படுத்துகிறது என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது".