'அது எப்படி நாங்க விட்ருவோமா?' - உதயநிதியை புகழ்வதில் வெட்கமில்லாமல் அடித்துக்கொண்ட தி.மு.க'வினர்

உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு கபடி போட்டி நடத்துவதில் தாம்பரம் தி.மு.கவினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

Update: 2022-12-18 12:52 GMT

தி.மு.க இளைஞரணி செயலாளரும், தற்பொழுது அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் பெருங்களத்தூர் தெற்கு தொகுதி தி.மு.க சார்பில் இரும்புலியூர் TTK நகர் மைதானத்தில் நேற்று கபடி போட்டி நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியை அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி நடைபெற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அனுமதி தர வேண்டாம் என்று எம்.எல்.ஏ ஆர்.எஸ்.ராஜாவின் ஆதரவாளர்கள் தரப்பில் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஆனால் வெளிவட்டார தரப்பில் கூறுகையில், ஏற்பாடு செய்திருந்த கபடி போட்டிக்கு தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ ராஜாவிற்கு முறையான அழைப்பு விடாததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக இவருடைய ஆதரவாளர்கள் இந்த போட்டியில் நடத்த விடாமல் கலவரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக சனிக்கிழமை இந்த போட்டி பல்வேறு எதிர்ப்புகளை மீறி நடைபெற்றது. மேலும் எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் திரண்டு வந்து போட்டியை நடக்கக்கூடாது என்றும் தடுத்து இருந்தார்கள்.


போட்டியை தொடங்க வைக்க வந்த அமைச்சர் அன்பரசனின் ஆதரவாளரான மேயர் வசந்தகுமார் உள்ளிட்ட பலரும் வந்து இருந்தனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் இடையே மோதல் பலமாகும் சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் வாய் தகராறு ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்ட இரு தரப்பினரையும் சமாதானப் படுத்தினர். தாம்பரம் மாநகர் தி.மு.கவில் சமீபகாலமாக கோஷ்டி பூசல் அதிகரித்து வருகிறது.

Input & Image courtesy:Hindu News

Tags:    

Similar News