ஹால் டிக்கெட்டில் பிரதமர் மற்றும் தோனி புகைப்படங்கள் - அதிர்ச்சியில் கல்லூரி நிர்வாகம்!

கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட ஹால் டிக்கெட்டில் பிரதமர் மற்றும் தோனியின் புகைப்படங்கள்.

Update: 2022-09-12 12:22 GMT

மாணவர்கள் எழுதும் தேர்வில் அவர்களை அனுமதிப்பதற்கான ஹால் டிக்கெட் கல்லூரி நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. மாணவர்கள் எழுதும் பல்கலைக் கழகத்திற்கான தேர்விற்கு வழங்கப்படும் ஹால் டிக்கெட்டுகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் அமைந்துள்ள லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளின் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான கல்லூரி தேர்வு நடத்தப்பட இருந்தது. அதற்கான ஹால் டிக்கெட் தற்போது கல்லூரி நிர்வாகம் சார்பில் வெளியீட்டு இருந்தது.


தேர்விற்கு வழங்கப்படும் ஹால் டிக்கெட் காண விவரங்களை மாணவர்கள் இணையதளத்தில் வழியாக பதிவேற்ற அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. தேர்விற்கு ஹால் டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்ட நிலையில் சில மாணவர்கள் அவர்களுடைய ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்தபோது ஹால் டிக்கெட் முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி புகைப்படம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தேர்விற்கான விவரங்களை மாணவர்கள் தங்களுடைய சுய பதிவு விண்ணப்பத்தின் மூலமாக பூர்த்தி செய்தார்கள். சில மாணவர்களின் பதிவேற்ற தவறான செயல்காரணமாக இது போல் பிழை நடந்திருப்பதாகவும் கல்லூரி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டு இருக்கிறது. ஏனெனில் புகைப்படமாக விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Input & Image courtesy: Nakkheeran News

Tags:    

Similar News