இந்துப் பண்டிகைகளுக்கு மட்டும் அறிவுரை கூறும் நிறுவனங்கள் - வறுக்கும் நெட்டிசன்கள்.!
இந்துப் பண்டிகைகளுக்கு மட்டும் அறிவுரை கூறும் நிறுவனங்கள் - வறுக்கும் நெட்டிசன்கள்.!
கார்ப்பரேட் நிறுவனங்கள் பொதுவாக இந்து மக்களின் பண்டிகைகளை தாக்கிய பல்வேறு விளம்பரங்கள் வெளியிட்டு வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக இந்துக்களின் பண்டிகையான தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடாது போன்ற பல்வேறு அறிவுரைகளை கொடுத்துள்ளனர். ஆனால் இவர்கள் ஏன்? கிறிஸ்துமஸ் அன்று மரம் வெட்ட கூடாது. ரம்ஜான் அன்று ஆடுகளை பலி கொடுக்க கூடாது என்று ஏன் சொல்லவில்லை.
மேலும் பொங்கல் பண்டிகை இந்து பண்டிகைகளே கிடையாது என்பதும், ஹோலி அன்று தண்ணீரை சேமிக்க வேண்டும் மற்றும் லட் என்ற குச்சியை பயன்படுத்தக் கூடாது என்பது போன்று இந்து பண்டிகைகளை குறிவைத்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தை சம்பாதித்துக் கொள்கின்றனர். இந்து மக்கள் தங்களுடைய விருப்பமான பண்டிகைகளை கூட மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு விடாமல், தங்களை ஒரு மாயவலையில் சிக்க வைக்க இத்தகைய நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன.
Car maker asking us to stop our festival.
— db (@db_is_db) November 8, 2020
May you have a miserable year in India dear Volvo. May your employees be laid off. Wishing you a miserable christmas.
வோல்வோ ஆட்டோமொபைல்ஸ் என்ற நிறுவனம் தற்போது இந்து மக்களுக்கு தீபாவளி கொண்டாடுவது எப்படி? என்பது போன்ற ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அதாவது அந்த விளம்பரத்தில் 'மாசு இல்லாத தீபாவளி'யை இந்து மக்கள் கொண்டாட வேண்டும் என்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், இந்து மக்கள் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க கூடாத என்பது போன்று கூறப்பட்டுள்ளது
Ahm ahm ahm Hypocrisy ain't it! Abrahmics SHOULD STEER CLEAR OF HEATHEN FESTIVITIES : LUKE 786 ! @volvocars pic.twitter.com/yKzxlnln1O
— Tan Tri #AAPasurMardini (@Tan_Tripathi) November 9, 2020
இந்த விளம்பரம் தற்போது சமூக ஊடக பயனாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. மேலும் நெட்டிசன்கள் கோபத்திற்கும் ஆளாகி உள்ளது வோல்வோ ஆட்டோ மொபைல்ஸ். ஏற்கனவே தனிஷ்க் இந்து மக்களுக்கு அறிவுரை கூறுவது போன்ற ஒரு விளம்பரம் பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது மீண்டும் வோல்வோ ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆகமொத்தத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைவரும் இன்று மக்களுக்கு அறிவுரை கூறும் விளம்பரங்களாக வெளியிட்டு வருகின்றனர் இதனால் இந்த மாதிரி செயல்கள் நெட்டிசன்கள் இடையே கடும் கோபத்தை கிளப்பியுள்ளது.