குலாம் நபி ஆசாத் பற்றி அவதூறு பரப்ப பத்திரிகைகளுக்கு பணம் - காங்கிரஸ் பித்தலாட்டம் அம்பலம்
மூத்த பத்திரிகையாளர் பல்லவி கோஷ் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார். முன்னாள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் குலாம் நபி ஆசாத்தை ஆக்ரோஷமாகத் செய்தி வெளியிடுமாறு காங்கிரஸ் கட்சி பத்திரிகையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது என்று கூறினார். இதற்கு பெரிய அளவிலான தொகை வழங்கப்பட உள்ளதாக கூறினார்.
கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைமையை விமர்சித்து கடிதம் எழுதிய குலாம் நபி ஆசாத் அக்கட்சியில் இருந்து விலகினார். காங்கிரஸ் வாரிசு ராகுல் காந்தி, கட்சிக்குள் இருந்த ஆலோசனை குழுவை அழித்ததாக கடுமையாக குற்றம் சாட்டினார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஹல்லா போல் என்ற பேரணியை காங்கிரஸ் நடத்துகிறது. அரசாங்கத்தை மட்டும் தாக்குவதற்கு காங்கிரஸ் கட்சி திட்டமிடவில்லை என்பது தெரிகிறது. அதன் முன்னாள் உறுப்பினரைத் தாக்கி பேசவும் திட்டமிட்டுள்ளது. குலாம் நபி ஆசாத் கட்சியை விட்டு வெளியேறியதில் இருந்து, ஆசாத் காங்கிரஸின் அனுதாபமுள்ள பத்திரிகையாளர்களால் விமர்சிக்கப்படுகிறார்.