Watch: 12ம் வகுப்பு மாணவிகளை லத்தியால் அடிக்கும் காங்கிரஸ் ஆளும் மாநில போலீஸ் !
லத்தி சார்ஜுக்குப் பிறகு இரண்டு பெண்கள் மயங்கி விழுந்தனர். மேலும் ஆறு பேர் காயமடைந்தனர்.
காங்கிரஸ் ஆளும் ஜார்க்கண்ட் மாநில காவல்துறை 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களைத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுத் தேர்வு முடிவுகளில் அதிருப்தி அடைந்ததால், ஆகஸ்ட் 6 அன்று மாநில அமைச்சர் பன்னா குப்தா முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது இந்த சம்பவம் நடந்தது. வைரல் வீடியோவில், காவல்துறையினர் மாணவர்களை கலைக்க லத்தி சார்ஜ் செய்ய உத்தரவிட்டதைக் காணலாம்.
ஜார்க்கண்ட் கல்வி கவுன்சிலால் அறிவிக்கப்பட்ட வாரிய தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், முடிவுகள் குறித்து மறுபரிசீலனை செய்ய கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இளம்பெண்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதற்காக, குப்தா தலைமையில் கூட்டம் நடந்து கொண்டிருந்த அறைக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
ANI செய்திகளுக்கு அளித்த பேட்டியில் ஜார்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ, "மறு மதிப்பீட்டிற்கென்று ஒரு நடைமுறை உள்ளது. தேர்ச்சி பெறாத மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற விரும்பினால், அதற்கென்று உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும்" என்றார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது. ஜார்க்கண்டின் பா.ஜ.க பிரிவும் மாநில அரசிடம் வலுவான நடவடிக்கை கோரியுள்ளது.