அக்டோபர் மாதத்தில் இருந்து இலவச தடுப்பூசி கிடையாது: தமிழக அமைச்சர் கூறியது என்ன?

செப்டம்பர் இறுதி வரை தான் இலவச கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-09-03 02:49 GMT

தமிழகத்தில் தற்போது அனைத்து இடங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் அனைத்து நடைபெற்று மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்ட வருகின்றது. அந்த வகையில் தற்போது 18 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப் படுகின்றது. ஆனால் தற்போது செப்டம்பர் மாதம் இறுதி வரை தான் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


எனவே செப்டம்பர் மாதம் இறுதியில் வரை இலவசமாக நீங்கள் போட்டுக் கொள்ளலாம். ஆனால் அதற்குப் பிறகு குறிப்பாக அக்டோபர் மாதத்தில் இருந்து தனியா மருத்துவமனைகளில் 360 கட்டணம் செலுத்தி தான் பூஸ்டர் தடுப்பூசி போட மாதிரி இருக்கும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவமனைகளிலும் அரசு நிர்ணயம் செய்து விலையில் தான் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.


சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தகவல் தொடர்பு மையத்தை திறந்து வைத்து அமைச்சர் அவர் மேற்கண்ட கருத்தை தெரிவித்து இருக்கிறார். மேலும் மார்பக புற்று நோயால் மக்கள் ஏற்படும் நிலைமைகள் குறித்தும் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், செப்டம்பர் மாதம் இறுதி வரை தான் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Polimer News

Tags:    

Similar News