10 கோடி கொரோனா தடுப்பூசி வீணாகி போனது ஏன்?

10 கோடி கொரோனா தடுப்பூசிகள் வீணாகி அழிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்.

Update: 2022-10-23 03:20 GMT

சீனாவில் 2019 ஆம் ஆண்டு உலகம் எங்கும் பரவிய கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டது. 18 வயதுக்கு மேல் ஆன அனைவரும் சென்ற ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேற்பட்டவர்களுக்கு கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படுகிறது.


ஜனவரி 10ஆம் தேதியிலிருந்து சுகாதாரப்பணியாளர்கள் முன்கள பணியாளர்கள் 60 வயது மேற்பட்டோர்களுக்கு புஸ்டர் டோஸ் முன்னெச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் செலுத்தப் படுகின்றது. ஆனாலும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதில் மக்களிடம் ஆர்வம் இல்லை. மத்திய சுகாதார அமைச்சகம் கொரோனா தடுப்பூசிகளை புதிதாக கொள்முதல் செய்யவில்லை என சமீபத்தில் முடிவு செய்தது. 2023 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 4237 கோடியே நிதி அமைச்சர் இடமிருந்து சுகாதார அமைச்சகம் திரும்ப பெற்றுக் கொண்டது.


இந்நிலையில் வளர்ந்து வரும் நாடுகளின் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அமைப்பின் மூன்று நாள் மாநாடு மராட்டிய மாநிலத்தில் நேற்று முன்திடம் தொடங்கியது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்க வழங்கும் இந்திய சீரம் நிறுவனம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பேசுகையில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் 10 கோடி டோஸ் காலாவதியாகி வீணாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தொடர்ந்து பேசுகையில், கடந்த டிசம்பர் மாதமே தடுப்பூசி உற்பத்தி செய்து நிறுத்திவிட்டோம். கொரோனாவால் மக்கள் சலிப்படைந்து விட்டனர். எனவே பூஸ்டர் தடுப்பூசிக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை நேர்மையுடன் சொல்கிறேன். எனக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது நாங்கள் எல்லோரும் சலிப்படைந்துவிட்டோம். 10 கோடிஸ் தடுப்பூசி வீணடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News