திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு அதிர்ச்சி- வைகுண்ட ஏகாதசியில் சிலுவைக்கு என்ன வேலை.?

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு அதிர்ச்சி- வைகுண்ட ஏகாதசியில் சிலுவைக்கு என்ன வேலை.?;

Update: 2020-12-30 06:58 GMT

திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி கொண்டாட்டங்களுக்காக செய்யப்பட்ட அலங்கார வேலைப்பாடுகளில் சிலுவை வடிவம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு மீது கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகளை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்படும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

மிக முக்கியத்துவம் வைணவ தலங்களில் ஒன்றான திருப்பதி திருமலையில் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடம் டிசம்பர் 25, ஆங்கில காலண்டரில் கிறிஸ்துமஸ் விழா நாளன்று வைகுண்ட ஏகாதசி நாளாக அமைந்தது‌. அன்று திருப்பதியில் செய்யப்பட்ட வண்ண விளக்கு அலங்காரங்களில் சிலுவை வடிவம் தென்பட்டது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இது பற்றி சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டன. இந்த புகைப்படங்கள் வைரலாகிய நிலையில் பக்தர்களின் எதிர்ப்பால் அந்த அலங்கார ஏற்பாடுகள் நீக்கப்பட்டன. ஆனால் தேவஸ்தானம் அந்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளது. சிலுவை வடிவம் எதுவும் வைக்கப்படவில்லை என்றும் பூர்ண கும்பம் போன்ற வடிவமைப்பையே சிலர் வேண்டுமென்றே திரித்து வதந்தி பரப்புவதாகவும் தெரிவித்துள்ளது.

 

 

சமூக ஊடகங்களில் மார்பிங் செய்யப்பட்ட படங்களைப் பகிர்ந்தவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் ஆந்திர அரசின் பொய் செய்தி மறுப்பு பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் தொலைவில் இருந்த பார்க்கும் போது சிலுவை வடிவம் நன்றாகத் தெரிவதாக பக்தர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

 

தவறை சுட்டிக் காட்டிய பக்தர்களை நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்துவதா என்றும், தங்கள் மீது தவறு இல்லை என்றால் அலங்காரத்தை ஏன் நீக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கத்திலும் கிறிஸ்துமசுக்கு செய்யப்படுவது போன்று சவுக்கு மர இலைகள் மற்றும் நறுமணம் இல்லாத பூக்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டதாத சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News