தமிழக அரசு CUTE நுழைவு தேர்வை எதிர்ப்பது சரியா? முன்னாள் பல்கலைக்கழக துணைவேந்தர்!

கியூட் நுழைவு தேர்வை தமிழக அரசு எதிர்ப்பது சரியல்ல முன்னாள் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்.;

Update: 2022-05-11 01:58 GMT

மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளாமல் அவர்கள் பல்கலைக்கழகங்களில் நுழையும்போது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. CUTE என்று அழைக்கப்படும் தேர்வு வைக்கப்படுகிறது. எனவே மத்திய அரசு சார்பில் இந்த ஆண்டு முதல் பல்கலைக்கழக மானியக் குழு இந்த தீர்ப்பை கட்டாயமாக்கி உள்ளது குறிப்பிடதக்கது. இந்த முடிவை தற்போது தமிழக எதிர்ப்பை தெரிவித்துள்ளது. எனவே மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக அரசின் இந்த செயல் அமைந்துள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். 


CUTE எனும் தேர்வை எதிர்ப்பது மாணவர்களின் நலனுக்காக வா? அல்லது மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்திற்காக இதைத் தொடர்ந்து செய்கின்றதா? என்பது தெரியவில்லை. மேலும் பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த தேர்வை தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் இயற்றி நிராகரித்து இருக்கிறது. மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை இந்தத் தேர்வு என்பது மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் விதமாக தான் அமைந்துள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் இந்த தேர்வை 13 மாநில மொழிகளில் எழுத இயலும் என்பது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக மாணவர்கள் நீட் முதலீட்டை தேர்வுகளை எழுதி சிறந்த வெற்றி வாகை சூடும் போது, இந்த தேர்வு என்பது மிகவும் சுலபமான எளிதாக தெளிவாகவே அவர்களுக்கு அமையக்கூடும். மேலும் பணிகளை கழக மானிய தேர்வு மிகவும் கடினம் என்றும் அவற்றை தமிழக மாணவர்கள் எதிர்கொள்வது மிகவும் சவாலான ஒரு சூழ்நிலை என்பதையும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியிருப்பது மாணவிகளின் உற்சாகத்தை குறைக்கும் விதமாகவே அமைந்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். 

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News