சமையல் எண்ணெயின் விலை குறைந்து விட்டதா? மத்திய அரசின் சூப்பர் அப்டேட்!

சமையல் எண்ணெயை குறைந்த விலையில் நுகர்வோருக்கு விரைவாக வழங்க நடவடிக்கை.

Update: 2023-05-06 06:06 GMT

சமையல் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவை நுகர்வோருக்கு விரைவாகக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கூறியுள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களின் சர்வதேச விலைகள் கீழ்நோக்கிய போக்கில் உள்ளன, இது இந்தியாவில் சமையல் எண்ணெய் துறையில் சாதகமான சூழ்நிலையை அளிக்கிறது. உலகளாவிய விலை வீழ்ச்சிக்கு மத்தியில் சமையல் எண்ணெய்களின் சில்லறை விலையை மேலும் குறைப்பது குறித்து ஆலோசிக்க, முன்னணி தொழில்துறை பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


கடந்த இரண்டு மாதங்களில் பல்வேறு சமையல் எண்ணெய்களின் உலகளாவிய விலைகள் ஒரு டன்னுக்கு 200-250 அமெரிக்க டாலர்கள் வரை குறைந்துள்ளது, ஆனால் சில்லறை சந்தைகளில் இது பிரதிபலிக்க காலதாமதம் ஆகிறது. சில்லறை விலைகள் விரைவில் குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. உணவு மற்றும் பொது விநியோகத் துறை, நாட்டில் சமையல் எண்ணெய்களின் விலைகளை உன்னிப்பாகக் கண்காணித்து ஆய்வு செய்து வருகிறது. மனித உணவின் முக்கிய அங்கமாக இருக்கும் சமையல் எண்ணெய்களின் மலிவு விலையை உறுதி செய்ய ஏதேனும் தலையீடு தேவைப்படும் போதெல்லாம் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது.


தற்போது சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளது. உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெய்களின் விலை வீழ்ச்சி படிப்படியாக உள்நாட்டு சந்தையில் எதிரொலித்து வருவது நுகர்வோருக்கு நிம்மதியை அளித்து வருகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News