பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் பிரதமர், உள்துறை அமைச்சரை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது - அலகாபாத் நீதிமன்றம் அதிரடி

பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் பிரதமர், மத்திய அமைச்சர்களை இழிவு படுத்துவதை ஏற்க முடியாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2022-07-19 11:26 GMT

பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் பிரதமர், மத்திய அமைச்சர்களை இழிவு படுத்துவதை ஏற்க முடியாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரை தரக்குறைவாகவும் இகழ்ந்தும் பலர் விமர்சித்து வரும் நிலையில் இது பற்றி மற்ற யாரேனும் கேட்கும் பட்சத்தில் இது எங்களது பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் எனக் கூறி வருவது வாடிக்கையாகிவிட்டது.

எந்த நிலையில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பிரதமர் உட்பட மத்திய அமைச்சர்களை இழிவு படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் குறித்து இழிவான வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட மும்தாஜ் மன்சூரி என்பவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு பட்டது.

இந்த வழக்கை எதிர்த்து அவர் நீதிமன்றம் சென்ற நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து நீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என அவர் மனுவை தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Source - Polimer

Similar News