14-வது ஏரோ இந்தியா கண்காட்சி: புதிய உற்சாகத்துடன் பாதுகாப்புத் துறை!

2023-24-ம் நிதியாண்டில் பாதுகாப்பு மூலதனக் கொள்முதல் பட்ஜெட்டில் 75 சதவீதம் உள்நாட்டு தொழில்துறைக்கு ஒதுக்கீடு.

Update: 2023-02-17 03:28 GMT

2023-24 ஆம் நிதியாண்டில் பாதுகாப்பு மூலதன கொள்முதல் பட்ஜெட்டில் 75 சதவீத உள்நாட்டு தொழில்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று 14-வது ஏரோ இந்தியா கண்காட்சியின் பந்தன் நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இது 2022- 2023 ஆண்டைக் காட்டிலும் 68 சதவீதம் அதிகமாகும். 2023-24 நிதியாண்டில் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இது மொத்த பட்ஜெட்டில் 13.18 சதவீதமாகும். நவீன மயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான ஒதுக்கீடு ரூ.1.63 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.


அமிர்த காலத்தில் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தும் மத்திய அரசின் முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையாக, இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக திரு ராஜ்நாத் சிங் கூறினார். “நீங்கள் ஒரு அடி எடுத்துவைத்தால், அரசு பத்து அடிகள் முன்னேற உறுதி மேற்கொள்கிறது. வளர்ச்சிப்பாதை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். நாங்கள் உங்களுக்கு முழு வானத்தையே வழங்குகின்றோம். மூலதனக் கொள்முதல் பட்ஜெட்டின் மூன்றில் ஒரு பகுதியை உள்ளூர் தொழிலுக்கு வழங்குவது இந்த திசையை நோக்கிய நடவடிக்கையாகும்” என்று அவர் கூறினார்.


இந்த நடவடிக்கையின் மூலம் இந்திய தொழில்துறை அதிக உற்சாகத்துடன் பாதுகாப்புத் துறையில் பங்கேற்று முன்னேற்றம் அடைய முன்வர வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் வலியுறுத்தினார். வலுவான, தற்சார்பான பாதுகாப்புத் தொழில் நாட்டின் பாதுகாப்பு நடைமுறையை வலுப்படுத்துவதுடன் மட்டுமல்லாமல் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும் என அவர் கருத்து தெரிவித்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News