கன மழையினால் மூழ்கிய டெல்லி விமான நிலையம்: சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ !
டெல்லி கனமழையின் காரணமாக விமான நிலையம் நீருக்குள் மூழ்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
டெல்லியில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக விமான நிலையத்தின் 3வது டெர்மினலில் மழை நீர் தேங்கியது. இதனால் விமானங்களை இயக்க முடியாத சூழ்நிலை உருவானதால், மழை நீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் குறிப்பாக விமானம் முழுவதும் நீருக்குள் மூழ்கியது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. எனவே கனமழையின் காரணமாக விமான போக்குவரத்து தற்போது வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமான நிலையம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் இதுபற்றி கூறுகையில், "சிரமத்திற்கு வருந்துகிறோம். கனமழை காரணமாக, சிறிது நேரத்திற்கு விமான நிலையத்தில் மழை நீர் தேங்கியது. ஊழியர்கள் உடனடியாக கவனித்து, பிரச்னையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்" என்று கூறப்பட்டு உள்ளது.
இதனிடையில் இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, டில்லி, NCR ரோதக், சர்கி தாத்ரி, மடன்ஹலி, ஜஜார், சோனிபட் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது. எப்படி இருந்தாலும் கனமழை நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் அங்கு மிகவும் குறைவாகவே உள்ளன.
Input & image courtesy: NDTV news