மசூதியில் கிடைக்கப்பட்ட சிவலிங்கம் பற்றிய சர்ச்சை கருத்து: பேராசிரியர் கைது!

சமீபத்தில் மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் பற்றிய சர்ச்சையான கருத்தை பதிவிட பேராசிரியர் கைது.

Update: 2022-05-22 02:06 GMT

டெல்லி அமைந்துள்ள இந்து கல்லூரியில் பேராசிரியர் ஒருவர், கியான்வாபி மசூதி வழக்கில் தற்போது கிடைக்கப் பெற்றுள்ள சிவலிங்கம் குறித்த சர்ச்சையான கருத்தை சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். இதற்காக அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி யாழ் இந்து பல்கலைக்கழகத்தில் வரலாற்று ஆசிரியராக ரத்தன் லால் உள்ளார். இவர் வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.  


மேலும் அவர் சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட கருத்து மதத்தின் அடிப்படைகள் இரண்டு அமைப்பினருக்கு இடையிலும் வேறுபாடு உருவாக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இதற்காக அவருக்கு இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 153, 295 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. லால் மீது, டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிந்தால் புகார் கொடுத்திருந்தார். அவர் அந்தப் புகாரில் ரத்தன் லால் ட்விட்டரில் சிவலிங்கம் குறித்து தவறாக சித்தரித்திருந்ததாகக் கூறினார்.


எனவே அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவருடைய போஸ்ட் வைரல் ஆன நிலையில் தனக்கு ஆன்லைனில் மிரட்டல்கள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். என்னுடைய சமூக வலைத்தளம் பக்கத்தில் என்னுடைய கருத்தை தான் என்பது விட்டு இறங்கி என்னுடைய தனிப்பட்ட கருத்து ஆனால் இது சமூகத்திற்கு எதிராக திரும்பும் என்று நான் எதிர் பார்க்கவில்லை என்பதும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். 

Input & Image courtesy:Hindutamil News

Tags:    

Similar News