10 அடி நீளமுள்ள தோசை சாப்பிட்டால் 71 ஆயிரம் பரிசு: புதிய முயற்சியை எடுக்கும் ஹோட்டல்!

10 அடி நீளமுள்ள பெரிய தோசையை முழுவதுமாக சாப்பிடும் நபர்களுக்கு 71 ஆயிரம் ரொக்கம் பரிசாக வழங்கப்படும் டெல்லி ஹோட்டல் அறிவிப்பு.

Update: 2022-02-03 13:38 GMT

எப்பொழுதும் உணவுப் பிரியர்கள் தன் சாப்பிடும் உணவை முழுமையாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். குறிப்பாக சாப்பாட்டு போட்டியில் அவர்கள் தங்களுடைய முழு திறனை உணவின் மீது காட்டுவார்கள் என்று கூறலாம். வெண்ணில கபடி குழு படத்தில் வருகின்ற காட்சிகளை போல பல்வேறு உணவுக் கடைகள் வைத்து இருக்கும் ஹோட்டல்கள் ஆங்காங்கே சில போட்டிகளை நடத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது டெல்லியில் உள்ள ஒரு உணவகம் 10 அடி நீளமுள்ள தோசையை முழுவதுமாக சாப்பிடும் நபர்களுக்கு 71 ஆயிரம் ரொக்கம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது. 


மேலும் இந்த போட்டியில் நிறைய பேர் கலந்துகொண்டு தங்கள் தோல்வியை அடைந்த அனுபவத்தை தற்பொழுது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் இந்த போட்டியில் கலந்துகொண்டு உணவை முழுவதுமாக சாப்பிட முடியாத நபர்கள் 1500 ரூபாய் பணத்தை செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது. பலருக்கும் இது எளிதான போட்டி போன்று தோன்றலாம். ஆனால், உண்மையில் இது சிரமமான போட்டியாகும். அதுவும் 10 அடி நீளமுள்ள தோசையை அவ்வளவு எளிதில் தனி நபரால் சாப்பிட முடியாது என்பதே உண்மையான ஒன்று. 


சாப்பாடு போட்டி என்பது சிறப்பான உணர்வை கொண்டு தர கூடியவை. இது போன்ற போட்டிகள் பல்வேறு உணவகங்கள் நடந்து வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, உத்தர பிரதேசத்தில் இது போன்ற உணவு போட்டி ஒன்று நடந்தது. அதில் 60 பூரிகளை ஒரே நேரத்தில் சாப்பிட கூடிய போட்டி நடந்தது. சாப்பாட்டு பிரியர்கள் அனைவரும் இத்தகைய போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள். 

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News