மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து வரும் டிஜிட்டல் இந்தியா: மத்திய அரசின் தீவிர முயற்சியினால் சாத்தியம்!

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 200 சதவீதம் அதிகரித்துள்ளது.

Update: 2023-02-15 01:29 GMT

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகமாக ஊக்குவித்து வருகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ரூபே கடன் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்பு BHIM UPI பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத் தொகைத் திட்டத்தை மத்திய அரசு இந்த நிதியாண்டில் அறிமுகம் செய்துள்ளது. இதுதவிர, அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக 2018-19 ஆம் நிதியாண்டிலிருந்து 4 ஆண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் 200 சதவீதம் உயர்ந்துள்ளது.


2018-19 ஆம் நிதியாண்டில் 2,326.02 கோடி என்ற எண்ணிக்கையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றன.    2021-22 ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 7,197.68 சதவீதமாக அதிகரித்துள்ளது. டிஜிட்டல் சேவைகளை தடையற்ற முறையில் வழங்க வங்கிகளும் புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் ஏற்று செயல்படுத்துகின்றன.


 BHIM, UPI, UPI-123, ஆதார் பரிவர்த்தனை போன்ற பல முன்முயற்சிகள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் மற்றும் வங்கிகளால் செயல்படுத்தப்படுகின்றன.

Input & Image courtesy: News

Tags:    

Similar News