2000 மேல் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தால் கட்டணமா? NPCL இறுதியில் கூறிய முடிவு என்ன?

வரும் ஏப்ரல் மாதம் முதல் 2000 க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தால் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு உண்மையா?

Update: 2023-03-30 01:40 GMT

இந்தியாவில் சமீபத்தில் பரிமாற்றம் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பல்வேறு இடங்களில் சிறு கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்திலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக UPI மூலமாக கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செய்திகள் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களுடைய பொருட்களுக்கான பணத்தை செலுத்துகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 2000 ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை செய்யும் நடவடிக்கைகளுக்கு கட்டணம் வசூல் செய்யப்படும் என்று தேசிய கொடுப்பினைவு கழகம் தெரிவித்து இருக்கிறது.


இதன் காரணமாக 2000 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்யும் அனைவரும் கட்டணம் செலுத்த வேண்டுமா? என்பது அடுத்த ஒரு கேள்வி குறியாக இருந்து வருகிறது. ஆனால் இது குறிப்பாக வணிக ரீதியான நடவடிக்கைகள் மற்றும் பரிவர்த்தனைகள் தொடர்பான செயல்பாட்டிற்கு மட்டும்தான் 2000 ரூபாய்க்கு மேல் நீங்கள் செலுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.


டிஜிட்டல் பரிவர்த்தனை வந்த பிறகு பண பரிமாற்றம் முற்றிலும் குறைந்துவிட்டது. குறிப்பாக சிறிய அளவிலான கடைகளில் கூட தற்பொழுது கியூ ஆர் கோடு மூலமாக பணத்தை வசூல் செய்து கொள்கிறார்கள். நேரடியாக வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து வியாபாரிகளின் வங்கி கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது. ஆனால் தற்பொழுது 2000 ரூபாய்க்கு மேல் நீங்கள் வியாபாரிகளுக்கு பணம் செலுத்தும் பொழுது கட்டணம் செலுத்த வேண்டும் என்று NPCL தெரிவித்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News