அரசு பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கிய தி.மு.க கவுன்சிலின் கணவர் - வலுக்கும் கண்டனங்கள்
தி.மு.க கவுன்சிலரின் கணவர் அரசு பள்ளி தலைமை ஆசிரியை தாக்கிய வீடியோ.
திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி கைகாட்டு புதூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 60 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி வளாகத்தில் அந்த பகுதியை சேர்ந்த பாஸ்கர் உள்ளிட்ட சிலர் குப்பைகளை கொட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது மாணவர்கள் சிலர் குப்பைகளை இங்கு கொட்ட கூடாது என்று கூறியிருக்கிறார்கள். இதனால் அந்த பள்ளி மாணவர்களை அவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக காயமடைந்து மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது பற்றி மாணவர்களின் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார்கள். உடனடியாக தலைமை ஆசிரியர் செந்தாமரைக் கண்ணன் இத்தொடர்பாக பாஸ்கரிடம் விசாரிக்க சென்று உள்ளார். விசாரிக்க சென்று இடத்தில் அங்கு இருந்த அவிநாசி பேரூராட்சி தி.மு.க பெண் கவுன்சிலரான ரமணியின் கணவர் துரையுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கவுன்சிலரின் கணவர் துரை பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கியுள்ளார். பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படவில்லை. தலைமை ஆசிரியரை பெண் கவுன்சிலரின் கணவர் தாக்கி சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Input & Image courtesy: Hindutamil News