ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தி.மு.கவினர் திருட்டு அம்பலம்: பா.ஜ.க கொடுத்த புகார்!

மத்திய அரசு கொண்டுவந்த ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தி.மு.கவினர் சுமார் 3 லட்சத்து 69 ஆயிரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.

Update: 2022-11-26 12:05 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டமான ஜல் ஜீவன் திட்டம் கொண்டுவரப் பட்டிருக்கிறது. குறிப்பாக ஜல்ஜீவன் திட்டம் என்பது அனைத்து குடும்பங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதாகும். மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தில் 3 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயினை சம்பந்தப்பட்ட நிர்வாகம் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த முரளிகிருஷ்ணன் என்பவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறார்.


இதன் காரணமாக அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் அடிக்கப்பட்டிருக்கிறார். மேலும் இந்த தகவல்களை அறிந்த பா.ஜ.க நிர்வாகம் அங்கு சென்று விசாரணை நடத்தியது. மக்கள் நல திட்டத்தை தங்களுக்கு பாதகமாக பயன்படுத்தி மக்கள் பணத்தை கையாடல் செய்வதாக பா.ஜ.கவினர் கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த கையாடலில் சமந்தப்பட்ட அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெளிவாகிறது.



மேலும் தட்டிக்கேட்ட முரளிகிருஷ்ணன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. மேலும் முரளிக்கு என்றும் பா.ஜ.க துணை நிற்கும் என உறுதியளித்து உள்ளது. மேலும் இது சம்பந்தமாக சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் மீது ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களிடம் புகார் மனு ஒன்றை கொடுக்க இருப்பதாகவும் திருவண்ணாமலை பா.ஜ.க நிர்வாகம் தகவல் தெரிவித்து இருக்கிறது.

Input & Image courtesy: Twitter

Tags:    

Similar News