தர்மபுர ஆதீனத்தை அழைத்து நிகழ்ச்சி - சர்ச்சை கிளப்பிய தி.மு.க எம்.பி செந்தில்குமார்?
புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் தர்மபுர ஆதீனத்தை அழைத்து பூமி பூஜை நிகழ்ச்சியில் கலவரத்தை ஏற்படுத்தி தி.மு.க MP
மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா அழைப்பிதழ் ஒன்றில் 'பூமி பூஜை' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு தி.மு.க எம்.பி செந்தில் குமார் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக மயிலாடுதுறை நகராட்சியில் மணக்குடி என்ற பகுதியில் இன்று காலை ஆறு முப்பது மணி அளவில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கான அழைப்புகள் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் பல்வேறு முக்கியமான நபர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். அத்துடன் தர்மபுரி ஆதீனம் ஸ்ரீ கைலாச கயிலை மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பிரம்மச்சாரிய சுவாமிகள் பூமி பூஜை விழாவில் ஆசி வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டு, அழைப்பிதழ் மேலே பூமி பூஜை விழா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு தர்மபுரி தொகுதி தி.மு.க எம்.பி தனது ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மயிலாடுதுறை மாநகராட்சி பார்வைக்கு இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்றும், தனது மக்கள் அரசியல் அமைப்பு சட்டம் உள்ள காரணத்தினால் மயிலாடுதுறை இந்தியாவில் அமைந்துள்ள ஒரு நகராட்சி என்ற அடிப்படையில் அந்த நிகழ்ச்சிக்கு பெயர் அடிக்கல் நாட்டு விழா அல்லது பணிகள் துவங்கும் விழா என்று பதிவிட்டு உள்ளார்கள்.
இதற்கு முன்பாக தர்மபுரி அரசு திட்டங்கள் ஒரு மதச் சார்பற்றதாக தொடங்கி பிரச்சினை ஏற்படுத்தினார். தற்போது மீண்டும் இதுபற்றியான மற்றொரு பிரச்சனையில் இவர் மூக்கை நுழைத்து இருக்கிறார். இந்துக்களின் சமய சடங்குகளின் மீது மட்டும் இவருக்கு அப்படி என்ன கோபம் என்று தெரியவில்லை. ஒவ்வொரு தடவையும் இந்துக்களின் மத நம்பிக்கை இவர் தொடர்ந்து தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்.
Input & Image courtesy: Oneindia News