டாஸ்மாக் லாபத்தில் குறியாக இருக்கும் தி.மு.க: ஏழைகளை வஞ்சிக்கிறது - கிளம்பிய குற்றச்சாட்டு!
மக்களின் துயரங்களை பொருட்படுத்தாமல் அரசு டாஸ்மாக் லாபத்தை பெருக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறது.
தமிழகத்தில் தற்பொழுது மது அருந்துவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. இதன் காரணமாக அரசு டாஸ்மாக் நிறுவனத்திற்கு கிடைக்கும் லாபமானது 25% அதிகரித்து இருக்கிறது. அதாவது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 25% அதிகமாக லாபத்தை பார்த்து இருக்கிறது. இதை உயர்த்துவதற்கு தற்போது தி.மு.க அரசு தன்னுடைய பட்ஜெட் தாக்கல் இன் போது இலக்கை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏழை மக்களின் துயர்களை அவர்கள் கண்டு கொள்வது கிடையாது.
குறிப்பாக தமிழக சட்ட சபையில் பட்ஜெட் தாக்கல் மீதான பொது விவாதம் நடைபெற்றது. அப்பொழுது அ.தி.மு.க எம்.எல்.ஏ ரவி என்பவர் கூறுகையில், அரசியல் டாஸ்மாக் வருவாய் சாதனை படை இருக்கிறது. கடந்த ஆண்டு 36,000 கோடி வருமானமும் இந்த ஆண்டு 45 ஆயிரம் கோடி வருமானமும் அரசின் கஜானாவிற்கு கிடைத்து இருக்கிறது. அந்த வகையில் 25 சதவீதம் அதிகமான வருமானத்தை டாஸ்மாக் மூலம் அரசு ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டு விட இது 25% அதிகமாகும். எனவே 25 சதவீதம் அதிகமானோர் தமிழகத்தில் மது போதைக்கு அடிமையாக்கி இருக்கிறார்கள்.
இதற்கு எதிர் தரப்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், தமிழகத்தில் தான் மது அருந்துவோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். குறிப்பாக மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் பொழுது தமிழகத்தில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்.
Input & Image courtesy: News