தி.மு.க'வின் ஊராட்சி துணைத் தலைவர் கமிஷன் கேட்கும் வீடியோ - இணையத்தில் தீயாக வைரலாகிறது
தி.மு.க'வின் ஊராட்சி துணைத் தலைவர் கமிஷன் கேட்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
தி.மு.க'வின் ஊராட்சி துணைத் தலைவர் கமிஷன் கேட்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலூர் ஊராட்சிகள் தலைவராக ரேணுகாதேவி உள்ளார் இந்த ஊராட்சியின் துணைத் தலைவர் நாகராஜ் ஒப்பந்தக்காரர்களிடம் அதிகாரிகளுக்கு கொடுக்கும் கமிஷன் சதவீதத்தை விளக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
மேலூர் ஊராட்சியில் 20 லட்சம், 50 லட்சம் போன்ற கட்டுமான பணிகளுக்கு மூன்று சதவீதம் கமிஷன் ஊராட்சி துணைத் தலைவர் தன்னிடம் கொடுக்க வேண்டும் என ஒப்பந்தக்காரர்களை வலியுறுத்துவதும் அதற்கு ஒப்பந்தக்காரர்கள் ஏற்கனவே பொறியாளருக்கு ஐந்து சதவீதமும், வேட்பாளர்களுக்கு 12% வீடியோ கம்ப்யூட்டர் செஷன் உள்ளிட்ட ஒவ்வொருவருக்கும் கமிஷன் கொடுத்த பின்பு பெறப் போவதாக துணை தலைவர் அவரிடம் கூறுகின்றனர்.
இதற்கு துணைத் தலைவர் நாங்கள் அம்பதாயிரம் வரை ஒவ்வொரு முறையும் டொனேஷன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் எங்களுக்கு கொடுக்க வேண்டிய மூன்று சதவிகிதத்தை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என கூறுகிறார் இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.