பொதுமக்கள் எந்த பிரிவினரை அதிகம் நம்புகிறார்கள்? நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு !
பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் பொதுமக்கள் எந்த பிரிவினரே அதிகம் நம்புகிறார்கள் என்பதற்கு பதில் கிடைத்துள்ளது.
தற்பொழுது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இப்ஸோஸ் என்ற பன்னாட்டு ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனம், மக்கள் எந்த பிரிவினரை அதிகம் நம்புகிறார்கள் என்ற ஆய்வை மேற்கொண்டது. அதில் மக்கள் அதிகமாக மருத்துவர்களையே நம்புவதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆய்வில் 52 சதவீத மக்கள் மருத்துவர்களை மட்டுமே நம்புவதாக தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது காரணம் என்னவென்றால் உலகில் எந்த பொதுமக்களும் அவர்களுடைய பொதுவான எண்ணம் நிச்சயம் ஒன்று போலத்தான் உள்ளது என்பதற்கு உதாரணமாக இந்த நிகழ்வு உள்ளது. அதற்கு வெளிநாடுகளும் விதிவிலக்கல்ல. மேலும் மருத்துவர்களுக்கு அடுத்த படியாக விஞ்ஞானிகள் நம்பிக்கைக்கு உரியவர்கள் என 51 சதவிகித மக்கள் கூறியுள்ளனர்.
அடுத்தபடியாக ஆசிரியர்களை அதிகம் நம்புவதாக 43 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். சாதாரண பொது மக்களை 27 சதவீதத்தினரும் ராணுவ வீரர்களை 22 சதவீதத்தினரும் நம்புவதாக தெரிவித்துள்ளனர். மக்கள் அதிகமாக நம்பக் கூடாதவர்களின் பட்டியலில் அரசியல்வாதிகள் முதலிடத்தை பிடித்துள்ளவர்கள். 52 சதவீத மக்கள் அரசியல்வாதிகளை நம்ப கூடாது என தெரிவித்துள்ளனர். இதில் இந்திய மக்களும் மலேசிய மக்களும் அரசியல்வாதிகள் மேல் நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அர்ஜென்டினா மற்றும் கொலம்பிய நகர மக்கள் அரசியல்வாதிகளை ஒட்டு மொத்தமாக நிராகரித்துள்ளனர். நம்பக் கூடாதவர்களின் பட்டியலில் அடுத்து இடம் பிடித்துள்ளவர்கள் அரசு அமைச்சர்கள். அவர்களுக்கு மைனல் 39 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. விளம்பரதாரர்களும் வங்கியாளர்களும் அடுத்தடுத்து இடம் பிடித்துள்ளனர். நம்பக் கூடாதவர்கள் பட்டியலில் கடைசியாக இடம் பிடித்துள்ளவர்கள் பத்திரிகையாளர்கள் அவர்களுக்கு மைனஸ் பத்து சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் பொதுவான கருத்துக்கள் எனும் நிறுவனம் தனது முடிவில் கூறியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அவர்கள் முடிவும் இது இதில் இருந்து வேறுபடுகிறது.
Input & Image courtesy:Free press journal