4.90 கோடியில் எலான் மஸ்க் அலுமினிய உருவ சிலை: அமைத்த கனடா ரசிகர்கள்!

4.90 கோடி செலவில் எலான் மஸ்க் சிலை கனடா ரசிகர்களால் அமைக்கப்பட்டு இருக்கிறது.

Update: 2022-11-11 04:10 GMT

உலக பணக்காரர் பட்டியலில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எலான் மஸ்க் இடம் பிடித்து வருகிறார். மேலும் இவருக்கு உலக அளவில் பல்வேறு ரசிகர்களும் இருந்து வருகிறார்கள் என்பது நாம் அறிந்தது. தற்பொழுது சமீபத்தில் கூட இவர் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களையும் தற்போது கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.


இவருடைய ரசிகர்கள் கனடாவில் இவருக்கு 4.90 கோடி செலவில் அலுமினிய உருவ சிலையை அமைத்து இருக்கிறார்கள். எலான் அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக அவருடைய ரசிகர்கள் 30 அடி நீளம் உள்ள அலுமினிய சிலையை அவருக்காக கனடாவில் அமைத்து இருக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள். நான்கு புள்ளி 90 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை சுமார் 5.9அங்குல உயரமுடையதும் குறிப்பிடத்தக்கது.


இவருடைய இந்த சிலை கனடாவில் திறக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. கனடா மக்களின் இந்த செயல் காரணமாக, எலான் அவர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார். ராக்கெட்டில் அமர்ந்து பயணம் செய்வது போன்ற எலான் மஸ்க் அவர்களின் உருவ சிலை, வருகின்ற 26 ஆம் தேதி டெஸ்லா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: https://www.polimernews.com/amp/news-article.php?id=191597&cid=2

Tags:    

Similar News